வாசல் இடுக்கமாய் உள்ளது 59-0301M 1. சகோதரன் நெவில் உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. கர்த்தருடைய வீட்டிற்கு திரும்பி வரவேண்டுமென்றிருப்பது மிகவும் நன்மையாய் உள்ளது. நான் எங்கே சென்றாலும் கவலையில்லை, ஆனால் கூடாரத்திற்கு திரும்பி வருவதற்கு நான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாயுள்ளேன். இந்த சிறிய பழைய இடத்திற்கு நான் திரும்பி வரவிரும்புவதைக் குறித்து ஏதோ காரியம் உண்டு. இது வெறுமனே, ஓ, நான்…இது என்னுடைய முதலாவது சபையாயும், நான் எப்போதும் போதகராய் இருந்து வருகிற ஒரே சபையுமாய் உள்ளது. எனவே இங்கு மீண்டும் திரும்பி வருவது நன்மையாகவே தென்படுகிறது. அந்த மகத்தான காலையிலே சூரியன் பிரகாசிக்க மறுக்கும்போது, நட்சத்திரங்களும் தங்களுடைய ஒளியை கொடாமல் மங்கும்போது, இந்தக் கூடாரத்திலிருந்து ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டிருக்கிற சிலர், அந்நாளில் அங்கே பிரசன்னமாவர் என்று நான் விசுவாசிக்கிறேன், நான் அந்த நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். 2 சற்று முன்பு நான் அறையினூடாக வந்தபோது, அங்கே பின்னால் உள்ள சகோதரி ஆர்கன்பிரைட்டை நான் சந்தித்தேன். அப்பொழுது அவள் கிங்ஸ்டன் (Kingston) கூட்டத்திற்கு அந்த நேரத்தில் வந்திருந்த சில ஜனங்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை என்னிடத்தில் கூறிக்கொண்டிருந்தாள். நான்…அவர்கள் ஒரு சாட்சியாக இங்கு இருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் எங்கிருந்தாலும், ஜாமாய்காவில் உள்ள கிங்ஸ்டன் கூட்டத்தில் இருந்தவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினால் நலமாயிருக்கும். அப்படியே, ஆம், மிகவும் பின்னால் உள்ளனர். சரி, அது அருமையாயிருக்கிறது. 3 நான் ஓரலினுடைய அஞ்சல் அட்டையைப் பார்க்கிறேன். நீங்கள் அவருடைய கூட்டங்களை ஏற்கனவே அறிவித்திருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன். நான் நேற்றைய தினம் வரையில் அந்த தேதிகளை, அதை அறியவேயில்லை. அது ஆறாம் தேதியிலே துவங்குகிறது என்று நான் நினைக்கிறேன். அது அப்படித்தானே? ஆறு முதல் பதினைந்து வரை லூயிவில்லில் சகோதரன் ராப்ட்ஸின் கூட்டங்கள். இப்பொழுது போய் அவர் பேசுவதைக் கேளுங்கள். சகோதரன் ராப்ட்ஸ் என்னுடைய ஒரு—ஒரு நெருங்கிய பழக்கமுள்ள நண்பனாகவும், ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும் இருக்கிறார். ஒவ்வொரு இரவும், நீங்கள் அவருடைய செய்திகளை கேட்டு மகிழ்வீர்கள் என்று நிச்சயமுடையவனாய் நான் இருக்கிறேன். ஒரு…அவருடைய, அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்போது, நீங்கள் தேவனுடைய அசைவைக் காண்பீர்கள் என்று நான்—நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். ஏனென்றால் அவர் ஒரு மகத்தான விசுவாச மாவீரனாய் இருக்கிறார். சகோதரன் ராப்ட்ஸை தேவன் வல்லமையாக பயன்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு மனிதனாய் உள்ளார். அவருடைய ஊழியமானது…உயர்ந்திருக்கிறது. 4 நான் முதலில் சகோதரன் ராப்ட்ஸை சந்தித்தபோது, அவர் மிஸொரியில் உள்ள பரி. லூயிஸில் ஒரு சிறிய கந்தையாய் கிழிந்த கூடாரத்தில் இருந்ததை நான் நினைவு கூருகிறேன். அப்பொழுது நான்…இல்லை. மிஸொரியிலுள்ல கான்ஸாஸ் பட்டணத்தில் இருந்தேன். நான் மிஸொரியிலுள்ள கான்ஸாஸ் பட்டிணத்தின் அரங்கத்தில் இருந்தேன். அவர் முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆராதனைக்குப் பிறகு நாங்கள் பின்னாக சுற்றிச் சென்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர் என்னைக் காட்டிலும் வாலிபமாக இருந்தார். ஓரல் தன்னுடைய நாற்பதுக்குட்பட்ட வயதில் இருந்தார். எனவே அவர், “வியாதியஸ்தருக்கான என்னுடைய ஜெபத்தை தேவன் கேட்பார் என்று நீர் நினைக்கிறீரா?” என்று கேட்டார். நான், “சகோதரனே, ஜெபிக்கும் எவருடைய ஜெபத்தையும் அவர் கேட்பார்” என்றேன். நல்லது, அவர் புறப்பட்டு சென்றார். அப்பொழுது அவர், “இதோ நான் போகிறேன்” என்றார். 5 அவர் கல்லூரிப் படிப்பையும், நான்கு வருட மனோதத்துவ இயலையும் கற்ற மிகவும் கூரறிவு திறமை வாய்ந்த ஒருவராய் இருக்கிறார். அவர் ஒரு—ஒரு திறமையான மனிதர் என்பதில் நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். அவர் இப்பொழுது ஒரு இடத்தை அமைத்து, அங்கு தன்னைச் சுற்றிலும் ஒரு ஆலோசகப் பணியாளர் குழாமையும் மற்ற காரியங்களையும் வைத்திருக்கிறார். அவர் பேசுகிறபொழுது, அவர்—அவர் தீரஆய்வு செய்து பேசுகிறார். நீங்கள் உண்மையாகவே அவருடைய பிரசங்கத்தை கேட்டு மகிழ்வீர்கள் என்ற நான் நிச்சயம் நம்புகிறேன். 6 எனவே இப்பொழுது பியூரிடோ ரிக்கோவிலும் (Puerto Rico), ஜமாய்க்காவிலும் (Jamaica) நடந்த எங்களுடைய சிறிய கூட்டத்தில் நம்முடைய கர்த்தர் என்ன செய்தார் என்பதன் பேரிலான ஒரு சிறிய அறிக்கையை நான் கொடுக்க விரும்புகிறேன். நான் அங்கு சென்றதே ஒரு விநோதமான காரியமாக இருந்தது. ஏனென்றால் அநேக தொலைபேசி அழைப்புகள் வந்திருந்தன. இங்குள்ள லியோ (Leo) அந்த தொலைபேசி அழைப்பை…அறிந்திருக்கிறார். ஒரு வாரம் முழுவதுமே சரியாக ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து கூட்டங்களுக்கான அழைப்புகள் வந்திருந்தன. ஆனால் அப்படியிருந்தும் அங்கு செல்ல, அதற்காக நான் வழி நடத்தப்படுவதை உணர விரும்புகிறேன். நான் செல்லும்படி என்னை அனுப்பின ஒரு மனிதனின் நிமித்தம் நான் வருவேனாயானால், அப்பொழுது நான் அந்த சபையின் பெயரில் அல்லது அந்த ஸ்தாபனத்தில் பெயரில் வருகிறேன். நான் செல்ல வேண்டும் என்று சகோதரன் நெவில் கூறின காரணத்தால் நான் செல்வேனேயானால், அப்பொழுது நான் சகோதரன் நெவிலின் பெயரில் செல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் இயேசுவானவர் அனுப்புகிற பொழுதே, நான் செல்ல விரும்புகிறேன். எனவே அப்பொழுதே நீங்கள் ஜனங்களை சந்திக்கும்படி கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்ல முடியும். 7 நான் படுக்கையின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் சற்று களைப்படைந்திருந்தேன். இந்த பள்ளத்தாக்கில், உடனடியாகவே அல்லது சற்று கழித்தோ, எப்போதாவது நான் இந்த பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற வேண்டும். ஏனென்றால் இது என்னுடைய தொண்டையில் குரல் வேறுபாட்டை உண்டாக்கக்கூடிய ஒரு இடமாய் இருக்கின்றபடியால் என்னால் தொடர்ந்து பேசமுடியாமல் போய்விடுகிறது. எனவே நான் தூரமாய் இருந்து திரும்பும்போது…லியோவும் நானும், நாங்கள் அன்றொரு நாள் வரும்போது, பிளாரிடாவில் உள்ள சதுப்பு நிலங்களில் நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தபோது தொண்டை தெளிவாக இருந்தது. ஆனால் லூயிவில்லில் நாற்பது மைல்களுக்குள்ளாக வந்தபோது அது மீண்டுமாக அடைத்துக் கொண்டது. சகோதரன் பாங்ஸ்உட் இந்த காலையில் இங்கு எங்கோ இருக்கத்தான் வேண்டும். அன்றொரு நாள் பியூரிடோ ரிக்கோ மற்றும் கிங்ஸ்டனிலிருந்து வந்தபோது என்னுடைய தொண்டை, எவ்வித கரகரப்பும் இல்லாமல் அவ்வளவு தெளிவாக இருந்து கொண்டிருந்தது. நான் ஆகாய விமானத்திலிருந்து இறங்கியவுடனும் அப்படியே நன்றாகவே இருந்தது. ஆனால் ஜெபர்சன்வில்லுக்கு போவதற்கு முன்னரே அது மீண்டும் அடைத்துக் கொண்டது. பாருங்கள், இங்கு பள்ளத்தாக்கு உள்ளது. அது காற்றில் உள்ள கிருமிகளாய் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது தேவனாய் இருக்க வேண்டும். ஏதோ ஒன்று என்னை இங்கிருந்து செல்லும்படி செய்ய முயற்சிக்கிறது. ஆகையால் என்னால்—என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அதற்காக ஜெபித்து அநேக முறைகள் வேண்டியிருக்கிறேன். 8 ஆனால் எப்படியிருந்தபோதிலும் நான் விழித்தெழுந்தபோது, அது காலை சுமார் மூன்று மணியாய் இருந்தது. என்னுடைய மனைவியும், சிறுபையனும் உறக்கத்தில் இருந்தனர். நான் படுக்கையின் பக்கத்தில் எழுந்து, திரளான ஜனங்கள் ஒரு விஸ்தாரமான இடத்தில் கூடியிருப்பதை கண்டேன். நான் பில்லியினிடத்தில், “நீ அங்கு சென்று, அந்த ஜனங்களுக்கு ஜெப அட்டைகள் கொடு” என்றேன். 9 அவன், “சரி அப்பா” என்றான். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவன் திரும்பி வந்து, “நீங்கள் அந்த ஜனங்களுக்கு ஜெப அட்டைகளை கொடுக்க இயலாது” என்றான். மேலும் அவன், “இந்த மனிதன் இங்கு நிற்பதை நீங்கள் காண்கிறீர்களா?” என்று கேட்டான். நான், “ஆம்” என்றேன். 10 அவன், “அவன் அங்கு சென்று, ‘ஒரு ஜெப அட்டை வேண்டுமென்கிற ஒவ்வொருவரும் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள் என்று நான் கூறினேன்’” என்றான். மேலும், “நான் அவனுக்கு ஒரு ஜெப அட்டையைக் கொடுக்கச் சென்றபோது, அவன் எங்கோ சென்றுவிட்டான். பின்னர் நான் அங்கே சென்றபோது, அவன் மீண்டும் வேறெங்கோ சென்றுவிட்டான். இப்பொழுது அவன் மீண்டும் இங்கு திரும்பி வந்திருக்கிறான்” என்றான். எனவே, “நான் ஒரு ஜெப அட்டையைக் கொடுக்க முடியாது” என்றான். 11 நான், “நல்லது, பில்லி, நீ ஜெப அட்டைகளை கொடுக்க வேண்டாம், ஏனென்றால் ஒவ்வொருவரையும் அழைத்து ஜெபிக்குமளவிற்கு அத்தகைய ஒரு பெரிய இடமாய் அமைந்துள்ளது…” என்றேன் நீங்கள் பாருங்கள், ஜெப அட்டைகள் குழப்பம் உண்டாவதை தவிர்க்கும்படிக்கே கொடுக்கப்படுகின்றன. நான், “ஓ, நான் ஒவ்வொருவரையும் அங்கு அழைத்து, எனக்குள்ள அந்த இடத்தில் அவர்களை வரிசைப்படுத்தி, ஒவ்வொருவராக அவர்களுக்காக ஜெபிக்க முடியும்” என்றேன். 12 அவன், “சரி” என்றான். பின்னர் அவன் வலப்பக்கமாக திரும்பி, என்னை விட்டுச் சென்றுவிட்டான். அவன் அந்த வழியாகச் சென்றுவிட்டபடியால் நான் இந்த வழியாக சுற்றி திரும்பி வந்து, அவனை கவனித்துக் கொண்டிருந்தேன். 13 அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் வந்ததைக் கண்டேன். அது, “ஆனால் இந்த நேரத்தில் நான் உன்னை மேன்மைப்படுத்த துவங்குவேன்” என்று உரைத்தது. அப்பொழுது நான் நோக்கிப் பார்த்தேன், நான் அத்தைகைய ஒரு திரளான ஜனங்களை ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்கள் எல்லாவிடத்திலிருந்தும் கூட்டமாக திரண்டு கொண்டிருந்தனர். 14 அப்பொழுது சகோதரன் ராபட்ஸினுடைய பெயர் கூப்பிடப்பட்டு, “இப்பொழுது சகோதரன் ஓரல் ராபட்ஸ் உம்மைக் காண வந்து கொண்டிருக்கிறார்” என்று கூறப்பட்டது. நான், “சகோதரன் ராபட்ஸை எப்படி வாழ்த்துவது விதமாகவே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் உம்மை வாழ்த்துகிற விதமாகவே” என்று கூறப்பட்டது. 15 நல்லது, சகோதரன் ராபட்ஸ் ஒரு கறுப்பு நிற சூட்டோடும், பிங்கிராஸ்பி (Bing Crosby) அணிகிறது போல ஒரு சிறு தொப்பியோடு, ஒரு சிறு கறுப்புத் தொப்பியோடும், அதை சற்று மேலே தூக்கியவாறு பின்னாக இறக்கிவிட்டுக் கொண்டு வருவதை நான் கண்டேன். நான் ஒருவிதமாக மேலே நின்றுகொண்டு, அவரை நோக்கிப் பார்க்க, அவர், “ஹலோ, சகோதரன் பிரான்ஹாம்” என்றார். அதற்கு நான், “ஹலோ, சகோதரன் ராபட்ஸ்” என்று கூறி, அவருடைய கரத்தைக் குலுக்கினேன். பின்னர் அவர், “உங்களை திருப்திபடுத்தக்கூடிய அளவு கூட்டம் வந்துள்ளது” என்றார். 16 நான், “சகோதரன் ராபட்ஸ், மிகுதியான கூட்டம்” என்றேன். அவரும் பில்லி சென்றது போலவே வலப்பக்கமாக திரும்பிச் சென்று விட்டார். 17 நானோ, “நான் எங்கிருந்து அவர்களிடத்திள் பேசப் போகிறேன்?” என்று நினைத்தேன். நான் எல்லாவிடத்திலிருந்தும் பேசும்படி ஒரு பொருளைக் கண்டறிய முயற்சித்து விட்டேன். நான் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தேன், எங்கிருந்து அவர்களிடம் பேசுவது என்பதையே என்னால் புரிந்து கொள்ளக் கூடாமலிருந்தது. யாரோ ஒருவர், “நல்லது, இங்கு வாருங்கள்” என்றார். 18 நான், “நல்லது, நீங்கள் அங்கு நலமான ஒன்றையுமே காணமுடியவில்லையே” என்றேன். நான் அந்த இடத்தை கடக்கத் துவங்கினேன். அப்பொழுது நான் இதை நினைவு கூர்ந்தேன். நான், “தேவனுக்கு முன்பாகவும், அவருடைய பிள்ளைகளுக்கு முன்பாகவும் எப்பொழுதும் என் இருதயத்தில் தாழ்மையாய் இருப்பதே நான் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாக உள்ளது” என்று சொல்லிக்கொண்டேன். 19 நான் தரிசனத்தை விட்டு தெளிந்தேன். நான், “அது எதைப் பொருட்படுத்துகிறது? நான் இருக்கப் போகிற அப்படிப்பட்ட…இல்லையென்றால் எங்கே அது உள்ளது என்றும், அவர் எங்கே இருக்கப்போகிறார் என்பதையும் பொருட்படுத்துவதாய் இருக்கலாம்” என்று எண்ணினேன். நீங்கள் பாருங்கள், சில நேரங்களில் தரிசனங்களில் அவர் உங்களுக்கு எங்கே என்றும் கூட கூறாமல், அவர்—அவர் வெறுமனே உங்களிடத்தில் பேசுகிறார், நீங்கள் வெறுமனே…அது உவமையைப் போன்று உள்ளது. வேதாகமத்தை வாசிக்கிற நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 20 பின்னர் நான் முன் அறைக்குள்ளாகச் சென்று சற்று நேரம் அமர்ந்திருந்தேன், அப்பொழுது காலை சுமார் மூன்று முப்பது அல்லது நான்கு மணியாய் இருக்கும். நான் உண்மையாகவே அரை தூக்கத்திலிருந்தேன். எனவே நான் திரும்பவும் சென்று படுத்துக் கொண்டேன். அப்பொழுது நான் ஒரு சொப்பனம் கண்டேன். அது மிகவும் விநோதமான ஒரு சொப்பனமாய் இருந்தது. உங்களில் அநேகர் என்னுடைய மேலாளர்களில் ஒருவரான ஜேக்மூரை, சகோதரன் ஜேக்மூரை அறிவீர்கள். நான் பல வருடங்களாகவே அவரை அறிந்திருக்கிறேன். நான் அவருடைய மகள், சுமார் பதினேழு வயதுடைய ஒரு பெண்ணோடு ஒரு தேதியைக் குறித்துக் கொண்டு, அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, அழைத்துக் கொண்டே, அவளை, சிறுமி ஜேக்கியை குன்றின் உச்சிக்கு வழிநடத்திக் கொண்டிருந்ததை எண்ணிப் பார்த்தேன். நல்லது, அவள் வெறுமனே ஒரு பாலூட்டும் குழந்தையாய் இருந்தது முதற்கொண்டே நான் அவளை அறிந்திருக்கிறேன். நான் அவளை குன்றின் மேலே வழிநடத்திக் கொண்டே, குன்றின்மேல் மூன்று நகர வட்டார அளவிற்கு உயரே சென்று விட்டேன். நாங்கள் ஒரு பெரிய மரத்தினடியில் வந்தபோது, அவள் கீழே அமர்ந்தாள். பத்தொன்பது வயதுக்குட்பட்ட அநேக பெண்பிள்ளைகள் அணிந்து கொள்ளும் பாவாடைகளின் மாதிரியை நீங்கள் அறிவீர்கள், அது ஒருவிதமாக புடைத்துக் கொண்டிருக்கும். அவள் அந்தவிதமான பாவாடைகளில் ஒன்றை உடுத்தியிருந்தாள். அவள் இந்த சிறிய பாவாடையை எடுத்து, அதை ஒருவிதமாக பரப்பி, கிழே அமர்ந்தாள். வழக்கமாக வாலிபப் பருவத்தினர் ஒருவரையொருவர் நோக்கிப் பார்ப்பது போல, அவள் தன்னுடைய கரங்களை இந்த விதமாக மடக்கிக் கட்டிக்கொண்டு, ஆகாயத்தை நோக்கிப் பார்க்கத் துவங்கினாள். நல்லது, ஜேக்கி ஒரு மிக அருமையான சிறு பெண், ஆனால் அவள் மிகப்பெரிய வாயையும், மிகப் பெரிய கண்களையும், ஒருவிதமான மஞ்சள் சிவப்பான முடியுடையவளாய், மிகவும் கவர்ச்சியற்றவளாய் இருக்கிறாள். ஆனால் உண்மையாகவே ஒரு சிறு பெண்மணியாய் இருக்கிறாள். அவள் ஆகாயத்தை நோக்கிப் பார்த்தபோது, ஆகாயத்தின் பிரதிபலிப்பு அவளுடைய கண்களில் எப்படி இருந்தது என்பதை என்னால் அவளுடைய பெரிதான கண்களில் காண முடிந்தது. 21 நல்லது, நான் அவளிடத்திலிருந்து சுமார் ஐந்து அடி தூரத்தில், இந்தவிதமாய் கீழே ஒருக்களித்து படுத்துக் கொண்டு ஒரு வைக்கோலை எடுத்து, அதை என் வாயில் வைத்து, அந்த வைக்கோலை மெல்லத் துவங்கினேன். நான், “நான் இங்கு என்ன செய்யப் போகிறேன்? நானோ ஒரு வயோதிப மனிதன், ஏன் இந்த வாலிபப் பெண்ணோடு இருக்கிறேன்? ஏன்?” என்று சிந்திக்கத் துவங்கினேன். நான், “எனக்கு திருமணமாகி, பிள்ளைகளை உடையவனாய் இருக்கிறேனே, இங்கு எனக்கு இந்த வாலிபப் பெண்ணோடு எவ்வித வேலையும் கிடையாதே” என்று கூறிக் கொண்டேன். 22 நான் எழும்ப ஆரம்பித்தேன். நான் எழும்பினபோது ஒரு சத்தம் மரத்திலிருந்து வந்து, “இது ஒரு காரணத்திற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது” என்றுரைத்தது. 23 நான் விழித்தெழுந்து ஒரு—ஒரு தீய கனவு கண்டது போல கிட்டத்தட்ட கூச்சலிட்டேன். நான், “ஓ, நான் பின்வாங்கிப் போகப் போவதை அது குறிக்கிறதா? என்றே வியப்புற்று” எண்ணிப் பார்த்தேன். நல்லது, நான், “என்னுடைய சொந்த சிந்தையை பயன்படுத்த முயற்சிப்பேனேயானால், அப்பொழுது நான் அவை எல்லாவற்றையுமே குழப்பி விடுவேன். எனவே நான் தேவன் பேரில் அப்படியே காத்திருப்பேன்” என்று எண்ணினேன். நான் ஜெபிக்கத் துவங்கினேன். நான், “கர்த்தாவே, அந்த சொப்பனம் முந்தின இரவில் உண்டான அந்த தரிசனத்தோடு சம்பந்தப்பட்டதா அல்லது அது எதை குறிப்பிடுகிறது?” என்று கேட்டேன். 24 சிறிது நேரம் காத்திருந்த பிறகு, ஒரு மணி நேரமாகியிருக்கலாம், (என்னுடைய மனைவி ஏற்கனே எழுந்து சிற்றுண்டியை ஆயத்தம் செய்திருந்தாள்.) அப்பொழுது அந்த சத்தம் மீண்டும் திரும்பவும் உண்டாகி, “கிங்ஸ்டனுக்கு போ, அங்கு நீ என்ன செய்ய வேண்டும் என்பது உனக்கு சொல்லப்படும்” என்றுரைத்தது. 25 ஆகையால் நான் உடனடியாக கிங்ஸ்டனுக்கு சென்றேன். அவர்கள்—அவர்கள் வெள்ளிக்கிழமை நான் அங்கு இருப்பேன் என்பதை வியாழக்கிழமை பிற்பகல் அறிந்து கொண்டனர். நாங்கள் செய்திருந்த விளம்பரமே அவ்வளவுதான். நான் நல்ல திறமையான முறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்யவோ…?…அல்லது ஜனக்கூட்டத்தை கணக்கிட்டு கூறுவதிலோ திறமையற்றவன், ஏனென்றால் என்னால் வழக்கமாக அதனை சரியாக கணக்கிட முடிகிறதில்லை. ஆனால் முதல் இரவிலே நாங்கள் சுமார் பன்னிரெண்டு, ஓ சுமார் ஆயிரத்து இருநூறு பேர்களை கொண்டிருந்தோம். ஏனென்றால் அது ஒரே நாளில் அறிந்து கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த நாள் அவர்கள் தகவலேந்தி மூலம் நான்கு மைல் தூரமுள்ள மலைகளுக்கு செய்தியை அனுப்பினர். ஒரு தகவலேந்தி நான்கு மணி நேரம் ஓடி தகவலைத் தந்தான். பின்னர் வேறொரு தகவலேந்தியை மலைகளுக்கு மேலே அனுப்பினர். எனவே இரண்டாம் நாள் இரவு சுமார் ஐந்தாயிரம் பேர் வந்திருந்தனர். பின்னர் மூன்றாம் நாள் இரவு பதினைந்தாயிரம், இருபதாயிரமாய் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டது. எனவே இலட்சக்கணக் கானோர் கர்த்தரண்டைக்கு வந்தனர். 26 அந்த தரிசனம் ஒரு சிறிய சபையாய் இருந்தது. அந்தப் பெண் ஒரு கன்னியாய், வெறுமனே ஒரு குழந்தையாய் இருந்தாள். அது சபையின் கன்னித்தன்மையை பொருட்படுத்தியது. குன்றின் மேல் உள்ள மூன்று நகர வட்டாரங்கள் நான் மூன்று நாட்கள் ஊழியம் செய்வேன் என்பதை குறிக்கிறதாய் இருந்தது. என்னுடைய ஊழியத்தைக் கொண்டு அந்த சிறு கற்புள்ள கன்னி சபையை, அவளிருந்த நிலையிலிருந்து அழைத்துச் சென்று அது முழு தீவையும் அசைக்கும் அளவிற்கு தேவனுடைய காரியங்களில் உயர்வானவற்றிற்கு கொண்டு சென்றேன். 27 ஓ, அப்பொழுது ஊழியக்காரர்களும், சுற்றியிருந்த ஜனங்களும் அழுது, கெஞ்சி, “வெறுமனே ஓர் இரவு இல்லை மூன்று இரவுகளிலும்” நகரப் பணியாளர்களை இணங்கியிருக்கச் செய்தனர். 28 நாங்கள் அங்கிருந்து பியூரிடோ ரிக்கோவிற்கு சென்றோம். அங்கு நாங்கள் மகத்தான வெற்றியை சந்தித்தோம். அந்த இடத்தில் இலட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அதில் நாற்பதாயிரம் விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள் கர்த்தராகிய இயேசுவண்டை வந்ததாக கணக்கிடப்பட்டது. போகையிலே, நான் நம்புகிறேன், நான்…நான் இதை என்னுடைய சொந்த சபையில் கூறுவேன், ஆனால் நான் அதை பொதுவான ஜனங்களிடத்தில் என்னுடைய சொந்த சபை ஜனங்கள் சுற்றிலும் இல்லாத இடத்தில் கூறமுடியாது. ஏனென்றால் அது தவறாக காணப்படலாம். ஆனால் நான் இங்கே ஒரு துண்டுத்தாளில் ஒரு நீதிபதியினுடைய பெயரை எழுதி வைத்திருக்கிறேன். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அவரும் அவருடைய பணிக்குழுவினரும் எங்களிடம் உரை நிகழ்த்தினர். 29 அப்பொழுது நான்…அவர்—அவர், “நாங்கள் இந்த தீவில் பல்வேறுபட்ட ஊழியக்காரர்களை கௌரவித்து வருகிறோம்” என்றார். அவர், “அண்மையில் திரு. பில்லிகிரஹாம், இந்தத் தீவிற்கு வந்து விட்டுச் சென்றார்” என்றார், மேலும் அவர், “அப்பொழுது எங்களுக்கு ஒரு—ஒரு மகிமையான கூட்டம் உண்டாயிருந்தது” என்றார். அவர், “ஆனால் பில்லிகிரஹாம் நாங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிற அதே சுவிசேஷத்தையே எங்களுக்குக் கொண்டு வந்தார்” என்றார். அவர், “பின்னர் நாங்கள் திரு.ராபட்ஸ் அவர்களை இந்தத் தீவில் கௌரவித்தோம்” என்று கூறி, “திரு. ராபட்ஸ் எங்களுக்கு மூன்று நாட்கள் மகத்தான கூட்டத்தை நடத்தித் தந்தார்” என்றும், “ஆனால் தங்கும் உணவு விடுதிகளின் செலவுகளோ மிகுதியாயிற்று” என்றும் கூறினார். மேலும், “மூன்று இரவுகளுக்கான தங்கும் உணவுவிடுதியின் செலவு முப்பத்தைந்தாயிரம் டாலர்களாக ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்” என்றார். அவர், “அதன் பின்னர் திரு. ஆஸ்பார்ன் இங்கிருந்தார், அவர் ஒரு மகத்தான கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருந்தார். ஆனாலும்” என்று கூறி, “திரு. ஆஸ்பார்ன் இங்கிருந்து சென்றபோது, எதிர்பார்த்தபடி நடவாமல் ஒரு ஏமாற்றமே உண்டாயிருந்தது என்றும், எல்லா காரியமே ஏமாற்றத்திற்குள்ளாகிவிட்டது போன்றே காணப்பட்டது” என்றார். 30 மேலும் அவர், “ஆனால் நாங்கள் இந்தக் கூட்டத்தை கவனித்தோம். அதாவது மேடையின் மேல் சகோதரன் பிரான்ஹாம் ஜெபிப்பது எவருக்குமே எளிமையாயிருந்தது. ஆனால்” என்று கூறி, “கூட்டம் முடிந்த பிறகு நாங்கள் ஜனக்கூட்டத்திலிருந்து பாராக்கட்டை வண்டிகள் நிறைய பழைய சக்கர நாற்காலிகளையும், ஊன்றுகோல்களையும் மற்றவற்றவைகளையும் பொறுக்கி எடுத்தோம்” என்றார். மேலும் அவர், “இந்த முறை இது ஒரு மனிதனாய் இருக்கவில்லை, ஆனால் தேவன் எங்களிடத்திற்கு வந்தார்” என்றார். 31 நான், “என்னுடைய ஜெபங்களை எதிர்பார்க்க வேண்டாம்; ஆனால் உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைத்து நீங்களே ஜெபியுங்கள்” என்றேன். அவர்கள் ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் நபர்களை மேடையின் மேல் கொண்டு வந்திருந்தனர். பகுத்தறிதல் உண்டானபோது ஜனங்கள் சத்தமிட்டு கதறினர். நாங்கள் நான்காம் தரமான உணவு விடுதியில் தங்கியிருந்து, நாங்களே எங்களுடைய சொந்த செலவுகளையும், மற்றும் பயணச்செலவுகளையும் முழுவதுமாக செலுத்தினோம். 32 அதைச் செய்ய நீங்களே உதவி செய்தீர்கள், நீங்கள் உங்களுடைய தசமபாகங்களினால் என்னை அனுப்பினீர்கள். அதனால்தான் அதைச் செய்தோம். நீங்கள் அதனுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள் என்பதை அதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வரப்போகும் மகத்தான மகிமையின் நாளில் தேவன் உங்களுக்கு அதன் பலனை அளிப்பார். பாருங்கள், நீங்கள் பெற்றுக் கொள்ளாமல்… 33 ஒரு நபர் சென்று ஏதோ ஒன்றைச் செய்வாரானால், பின்னர் நீங்கள் பாருங்கள், அந்த நபர் புறப்பட்டுச் செல்லுகிறபோது, அவர்கள், “ஒரு பெரிய ஏமாற்றம் என்றும், தேவன் எங்களை விட்டுச் சென்று விட்டார்” என்றும் நினைக்கிறார்கள். தேவன் உங்களோடு இருக்கிறார். தேவன் ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட ஊழியத்திற்காக உபயோகிக்கலாம். ஆனால் அது அந்த நபருக்கு தேவன் பேரில் உள்ள விருப்பத்தை அது குறிப்பிடுகிறதில்லை. அது தேவனில் உள்ள உங்களுடைய சொந்த விசுவாசமாயிருக்கிறது. 34 அங்கே அவர்கள் பண்டைய இலேசான சிறு ஒற்றைக் குதிரையை சக்கர வண்டிகளில், அதாவது அவர்கள் சிறிய ஒற்றைக் குதிரை வண்டி சக்கரங்களைப் போல ஆயத்தப்படுத்தி எடுத்துக் கொண்டு, ஒரு பலகையை உண்டுபண்ணி, அதன்மீது ஜனங்களை படுக்கச் செய்து, அவைகளை உள்ளே உருட்டிச் செல்கின்றனர். ஆனால் ஆராதனை முடிந்த பிறகோ முழு குதிரைப்பந்தய மைதானமும் காலியாகிவிட, பின்னர் இவர்கள் நான்கு சக்கர பாராக்கட்டை வண்டிகளிலும் பண்டைய சிறுகட்டை வண்டிகளிலும் சென்று பண்டைய பெரிய நாற்காலிகளையும், ஊன்றுகோல்களையும், படுக்கைகளையும், கட்டில்களையும் வாரிக்கொண்டு வருகின்றனர். அங்கே கர்த்தரின் பிரசன்னம் இருந்தபடியால் அவர்கள் அவைகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தனர். அதைத்தான் நாம் காண விரும்பிகிறோம். அப்பொழுது மனிதன் காட்சியிலிருந்து விலக, தேவன் அசைவாடிக் கொண்டிருக்கிறார். 35 இப்பொழுது இந்த காலையில் சற்று உதவி செய்யும்படியாய் வந்துள்ளேன். எனவே நான் ஒரு சில நிமிடங்கள் பேசப் போகிறேன். இந்த ஒலிநாடாவை முதலில் வெளியில் அனுப்பிவிட வேண்டாம் என்று நான் பையன்களிடம் கேட்டுக் கொண்டேன். மூன்று நாட்களாகவே, “நான் எதன் பேரில் பேசலாம்?” என்று கடினமாக சிந்தித்து வந்தேன். இந்த காலையில் நான் புறப்படுவதற்கு முன்னதாக என்னுடைய இருதயத்தில் சபைக்கான ஒரு கடுமையான எச்சரிப்பை உண்மையாகவே நான் உணர்ந்தேன். எனவே நான் அவர்களிடத்தில், “ஒலிநாடாவில் பதிவு செய்யுங்கள், ஆனால் அவைகளை விற்பனைக்காக வெளியிட வேண்டாம்” என்றேன். 36 ஆனால் நாம் இதைச் செய்வதற்கு முன்பு நான் உங்களுக்கு ஒரு சிறு சாட்சியை கூற விரும்புகிறேன். அது உங்களுக்கு நன்மையை செய்யலாம். ஏனெனில் அது எனக்கு நன்மை செய்தது. நாங்கள் லியோ, நான், என்னுடைய மகன் பில்லிபாலும், அவனுடைய மனைவியும் மற்றும் ஜியார்ஜியாவிலிருந்து இங்கு கூடாரத்திற்கு வருகிற ஒரு நண்பரோடும் மூன்று நாட்கள் மீன்பிடிப்பு பயணமாக சென்றிருந்தோம். அவர்கள் எங்களை தூரமாக ஒரு சதுப்பு நிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அது சரியாக எங்கே இருந்தது என்பதை நான் அறியேன். ஆனால் ஒகீகோபீக்கு (Okeechobee) அருகிலோ அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு இடமாய் இருக்கலாம். அவைகளின் பெயரை நான் அறியேன், அதை செமினோல் இந்தியர்கள் கொடுத்திருந்தனர். ஆனால் எப்படியிருந்தபோதிலும் நாங்கள் அநேக மைல்கள் தூரத்தில் இருந்தோம். 37 இந்த சகோதரன் ஈவான்ஸினுடைய சகோதரன் ஒரு பாவியாக இருந்தார். அவர் ஒரு மிகப்பெரிய செம்படவனாய் இருந்தார். அவர் ஒரு சில மாதங்களக்கு முன் சதுப்பு நிலங்களுக்குள்ளாக சென்றிருந்தார். அவர்கள், “வாலில் விஷமுள் கொண்ட நச்சுப்பாம்பு” என்று கூறும் பாம்புகள் அங்கிருந்தன. அந்த நச்சுப் பாம்பு அவரை கடித்துவிட்டது. அப்பொழுது அவர் மரிக்கும் தருவாயில் கிடந்தார். அவருடைய சரீரம் வீங்கிவிட்டிருந்தபடியால் அவர்கள் அவரை வைத்தியரிடம் அழைத்துச் சென்று, அவருக்கு பல ஊசியைப் போட்டனர். ஆயினும் அந்த காரியங்கள் பயனற்றதாகிவிட்டன. அந்த இடங்களில் அதிகமாக உள்வாய் வெண்ணிறமான நச்சுநீர் பாம்புகளும், கொடிய விஷமுள்ள தண்ணீர் பாம்புகளும், இருபது அடி நீளமுள்ள பெரிய முதலைகளும் இருக்கின்றன. 38 நாங்கள் அங்கே மீன் பிடித்துக் கோண்டிருந்தபோது, நான் ஒரு மிகப் பெரிய மீனை பிடித்திருந்தேன். ஓ, அது உண்மையாகவே ஒரு பொழுது போக்கு நாளாய் இருந்தது. அது மிகப் பெரியதாய் இருந்தபடியால் என்னால் அதை தண்ணீரிலிருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே நான் அந்த தூண்டிலை நேராக்கினேன், இல்லையென்றால் அது எளிதாய் தப்பித்துவிடும். நாங்கள் சுமார் பெரிய மீன்களை பிடித்திருந்தோம். அவைகளில் சில அதிக பவுண்டு எடையுள்ளதாயும், சில நான்கிலிருந்து ஏழு, எட்டு பவுண்டுகள் எடையுள்ளவைகளாகவும் இருந்தன. நான் இந்த மிகப்பெரிய மீன் ஒன்றை பிடித்திருந்தேன். அது நழுவி விட்டது. 39 எனவே, நான் அந்த ஒன்றை விட்டுவிட்டு, நான்—நான் ஆறு, ஏழு பவுண்டுகள் எடை கொண்ட மற்றொன்றைப் பிடித்தேன். நான் லில்லி இதழ்களின் மேல் தெரியும்படி வைக்கும் அளவிற்கு நீளமான ஒரு கோலை வைத்திருந்தேன். சகோதரன் ஈவான்ஸும்…வைத்திருந்தார். நாங்கள் முழுமையாகவே தண்ணீரில் நனைந்திருந்தோம். ஏனென்றால் அது வெறுமனே சதுப்பு நிலமாக இருந்தது. எனவே அவர் தன்னுடைய காலணிகளை கழற்றிவிட்டு, தன்னுடைய ஆடைகளை உலர வைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் இந்தப் பெரிய மீன் புதர்களில் சுற்றி புரளுவதைக் கண்டார். நானும் அவருக்கு நேராக சென்று கொண்டிருந்தேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம் அப்படியே ஒரு நிமிடம் இருங்கள், நான் அதை உங்களுக்காக பிடித்து வருகிறேன்” என்றார். அவர் அங்கு ஓடினார். பின்னர் மீன் கிட்டத்தட்ட மரித்துப்போய் விடுமளவில் இதழ்களில் படுத்துள்ளது என்று யூகித்து அதை மேலே இழுத்தேன். அவர் அதை மேலே தூக்கியபோது, அவர் வேதனையோடு அலறிக்கொண்டே கூக்குரலிட்டுக் கொண்டு அங்கே திரும்பி வந்தார். ஒரு நச்சுப்பாம்பு அவரை கடித்துவிட்டிருந்தது. 40 நாங்கள் அவரை பார்த்தபோது, அவருடைய காலில் அந்த நச்சுப்பாம்பு கடித்திருந்த அந்த இடத்தில் நச்சுப்பல் கடித்திறங்கின துவாரங்கள் இருந்தன. அது அவருடைய கண்களில் கண்ணீர் வருமளவிற்கு அவரை மிகவும் மோசமாக காயப்படுத்தியிருந்தது. எனவே அவர் தன்னுடைய எலும்புகள் செயலற்று மரத்துப் போய்க் கொண்டிருப்பதை போல் உணர்வதாக கூறினார். நாங்களோ அநேக மைல்கள் தூரத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தோம். அவர் ஒரு பெரிய திடகாத்திரமான மனிதனாயிருந்தபடியால் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு பாம்பு உங்களை கடிக்கும்போது, நீங்கள் கிட்டத்தட்ட மரித்துவிடுமளவிற்கு ஒரு சில நிமிடங்களிலேயே மிகவும் சுகவீனமடைந்து விடுவீர்கள். அப்பொழுது லியோ அங்கு நின்று கொண்டிருந்தார். அப்பொழுதும் “நீர் இன்னமும் தேவனாயிருக்கிறீரே” என்ற ஒரு காரியம் என்னுடைய சிந்தையில் உண்டானது. அவர் தன்னுடைய காலை கையினால் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தார். அந்த நச்சுப்பாம்பு அவரை கடிந்த இடத்தில் அதனுடைய இரண்டு நச்சுப்பற்கள் கடித்திறங்கின துவாரங்கள் இருந்தன. நான் அந்த இடத்தின் மேல் கரங்களை வைத்து, “கர்த்தாவே உம்முடைய வார்த்தையில், அவர்கள் சர்ப்பங்களின் தலைகளையும், தேள்களையும் மிதிப்பார்கள், ஒன்றும் அவர்களை சேதப்படுத்தாது என்று எழுதியிருக்கிறதே” என்றேன். அப்பொழுது உடனடியாக அவருடைய காலில் உண்டாயிருந்த வலி நீங்கிற்று. ஆகையால் அவர் உடனே தன்னுடைய காலணிகளை அணிந்து, அந்நாள் முழுவதும் மீன்பிடித்தார். 41 நாங்கள் அந்த இரவு சென்று அதைக் குறித்து மற்றவர்களிடம் கூறினபோது, அவர்கள், “நீர் மருத்துவரிடம் செல்வது மேலானது” என்றனர். 42 அதற்கு அவர், “தேவன் என்னை இம்மட்டும் பாதுகாத்துக் கொண்டாரென்றால், அவர் என்னைக் குறித்த மற்ற யாவற்றையும் குறித்து பொறுப்பெடுத்துக்கொள்வார்” என்றார். நாங்கள் மூன்று நாட்களும் மீன்பிடிக்கையில் எந்த சுகவீன விளைவும் ஏற்படவேயில்லை. 43 தேவன் இன்னமும் தேவனாகவே இருக்கிறார். அவர் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் காத்துக் கொள்கிறார். என்னுடைய முழு ஊழியத்திலும், ஒரு பாம்புக்கடியண்டைக்கு தேவன் வந்ததை நான் கண்டது அதுவே முதல் முறையாகும். ஏனெனில் பாம்பு கடித்துவிட்ட ஒருவருக்காக நான் ஜெபிக்கும்படியான தருணத்தைப் பெற்றிருந்தது. அதுவே முதல் முறையாக இருந்தது. அவர் தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் காத்துக் கொள்கிறார் என்றும், அவருடைய வார்த்தைகள் நன்மையானதும், உண்மையானதுமாயிருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளும்படி செய்கிறார். ஆமென். 44 இன்றிரவு ஆராதனையையும், வருகின்ற புதன்கிழமை ஆராதனையையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது உண்மையாகவே யாரோ ஒருவருகு ஜெபம் தேவைப்படுகிறதென்றால் அது எனக்கே ஆகும். நினைவில் கொள்ளுங்கள். சகோதரன் ராபட்ஸினுடைய கூட்டம் பட்டணத்திலிருந்து நடைபெறும்போது, சென்று கலந்துகொண்டு கூடாரத்திலிருந்து அவருக்கு வாழ்த்துதலைக் கூறுங்கள். 45 நாம் வேத வாக்கியங்களை வாசிப்பதற்கு முன்பு, நாம் நம்முடைய காலூன்றி அப்படியே ஒரு நிமிடம் எழும்பி நிற்க வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். நாம் சபையின் பழைய ஞானப்பாட்டாகிய, “என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது” என்ற இந்த மகிமையான பாடலின் ஒரு பல்லவியை அல்லது இரண்டு பல்லவியை வெறுமனே இசையின்றி பாடுவோமாக. சரி இப்பொழுது எல்லோரும் என்னோடு சேர்ந்து பாடுங்கள், அதை நாம் பாடுவோமாக. நீங்கள் எப்படி பாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து சிந்திக்காமல், அப்படியே அதை தேவனுடைய மகிமைக்கென்று பாடுங்கள். சகோதரன் நெவில், நீர் அதை எங்களுக்கு முன்னின்று நடத்திக் கொடுப்பீரா? என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது. கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே; இப்பொழுது நான் ஜெபிக்கையில் எனக்கு செவிகொடும் என் குற்றத்தை போக்கிவிடும், ஓ, இன்று முதல் என்னை முழுமையாக உம்முடையவனாக்கிவிடும்! வாழ்க்கையின் இருளான பாதையில் நான் நடக்கும்போது துயரம் என்னைச் சூழ்ந்து பெருகுகையில், நீரே என் வழிகாட்டியாயிரும்; இருள் பகலாய் மாற கட்டளையிட்டு, துக்கத்தை தொலைத்து, பயத்தை நீக்கி, உம்மை விட்டு விலகாதபடிக்கு என்னை என்றென்றைக்கும் கைவிடாதேயும். 46 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நான் வேதாகமத்தின் புனித ஏடுகளிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். பரிசுத்தர் மத்தேயு, 7ம் அதிகாரம் 13 மற்றும் 14 வது வசனங்கள். நாம் அதனை வாசிக்கையில் கர்த்தர் தம்முடைய ஐசுவரியமான ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். 47 நாம் ஜெபம் செய்வோமாக. ஓ, தேவனே, கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்தும், கல்லறையிலிருந்தும் திரும்பவும் கொண்டு வந்தவரே, அவரை இந்த காலையில் ஒரு ஜீவ பலியாக எங்களுக்கு அளித்துள்ளவரே, நீர் எங்களைக் குறித்து அக்கறையுள்ளவராக இருப்பீர் என்ற எண்ணத்தின் பேரில் நாங்கள் எங்களுடைய ஜீவியங்களை புதியதாய் உம்மண்டை தாழ்மையாய் அர்ப்பணம் செய்கிறோம். நாங்கள் பாவிகளாய் இருக்கையில், பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கையில், நீர் உம்முடைய ஒரே பேரான குமாரனை, பாவ மாம்ச சாயலில் உண்டாக்கி, எங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்யும் ஒரு கிருபாதார பலியாக்குபடிக்கு அனுப்பினீர். அந்த குற்றமற்றவர் எங்களை உம்முடைய ஐக்கியத்தில் மீண்டும் ஒப்புரவாக்கும்படி சேர்க்க, குற்றத்திற்காக பாடுபட்டார். 48 ஓ, தேவனே, இந்த காலையில் எங்கள் மத்தியில் ஏதாவது பாவம் இருக்குமானால், எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திற்கும் தேவனுடைய செய்தியை கொண்டு வருகின்ற பரிசுத்த ஆவியானவரை தடைசெய்யும்படியான ஏதாவது காரியம் இருக்குமானால், கர்த்தாவே, நீர் எங்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு மன்னிக்கும்படி நாங்கள் தாழ்மையாய் ஜெபிக்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் எங்களை சுத்தப்படுத்தும். நாங்கள் ஒன்றுமற்றவர்கள் என்பதை நாங்களே அறிந்துள்ளோம். நாங்கள் ஒன்றுமற்றவர்கள் என நாங்கள் அறிக்கை செய்கிறோம். ஆனால் நீர் பரிசுத்தராய், உண்மையுள்ளவராய், நீதிபராய், இரக்கத்தின் ஊற்றாய் இருக்கிறீர். பியூரிடோவிலிருந்தும், ஜமாய்க்காவிலிருந்தும் சாட்சிகள் வெளியே சென்றன, ஏனெனில் நீர் அப்படிப்பட்ட மகத்தான கிரியைகளை அங்கு செய்திருக்கிறீர். ஓ, தேவனே, அது நீதிபரரின் வருகையின் அடையாளமாய் உள்ளது. 49 நீர் எப்படியாய் சகோதரன் ஈவான்ஸை அந்த சர்ப்பத்தின் விஷப்பற்களிலிருந்து விடுவித்தீர். ஏனெனெனில் அவர் ஒரு விசுவாசியாய் இருந்தார். உம்முடைய வார்த்தைகள் எப்பொழுதும் உண்மையானவைகளாக இருக்கின்றன. இப்பொழுதும் கர்த்தாவே, சத்துரு எங்களை கடித்து விஷப்படுத்தியிருக்கின்ற மரண விஷப்பற்களிலிருந்து இந்த காலையில் எங்களை விடுவியும். கர்த்தாவே, இந்த காலையில் உம்முடைய பிசின் தைலத்தை எங்களுடைய ஆவிகளில் தோய்த்து, எல்லா அநீதிகளிலிருந்தும் எங்களை சுத்திகரிப்பீராக. சத்துருவின் வல்லமையினால் நொறுங்குண்டிருக்கிற மாம்சப்பிரகாரமான சரீரங்களின் சுகவீனங்களை சுகப்படுத்தும். தெய்வீக பிரசன்னத்தில் உள்ள அவர்கள் எல்லோரும் சுகமடைவார்களாக. 50 கர்த்தாவே, எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையின் மூலமாக எங்களிடத்தில் இப்பொழுது பேசும். என்ன கூறவேண்டும் என்று அறியாதிருக்கிறபடியால் நீரே அதை அருளும். கர்த்தாவே நீர் எங்களை எச்சரித்து உம்முடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்தும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் அவர் பொருட்டு வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 51 நான் எப்பொழுதுமே சற்று தாமதமாக வருகிறேன். ஏனென்றால் இப்பொழுது நான் காத்திருக்கிறேன். ஞாயிறு பள்ளி முடிந்துவிட்டது என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அதைக் குறித்த ஏதோ காரியம் உண்டு, நான் வீட்டிலிருந்து வரும்போது எனக்கு ஏராளமான நேரம் உள்ளது என்பதைப் போன்றே நான் உணர்ந்தேன். எப்படியாயினும் நாம் மிகவும் அவசரத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நாம் சீக்கிரமாய் முடிக்க தேவனிடத்தில் விசுவாசமாயிருக்கப் போகிறோம். 52 நம்முடைய ஆண்டவர் இந்த கடுமையான எச்சரிக்கையை அவருடைய சந்ததியில் இருந்த ஜனங்களிடத்தில் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஜனங்கள் மிகவும் பக்தியுள்ளவர்களாய் இருந்தனர். அவர், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றார். இப்பொழுது அவர்கள் பக்தியில்லாதவர்களாய் இருந்த காரணத்தால் அதை கூறிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் மிகவும் பக்தியானவர்களாய் இருந்தனர். ஆனால் அவர்கள் சபையிலும், குறிப்பிட்ட கோட்பாடுகளிலும், ஸ்தாபனங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்து, (பரம்பியிருக்கவே) தேவனில் விசுவாசமாயிருந்தபடியால் அவர்கள் ஒவ்வொரு காரியத்திலும் சரியாய் இருந்தனர் என்றே எண்ணிக் கொண்டனர். ஆனால் அவர் வெகு சிலரே உள்ளே பிரவேசிப்பார்கள் என்று அவர்களிடத்தில் கூறிக் கொண்டிருந்தார். 53 எனவே நான் அந்த சந்ததியை இந்த சந்ததிக்கு ஒப்பிடக் கூடுமோ என்று இந்த காலையில் நான் வியப்படைந்து கொண்டிருக்கிறேன். பாருங்கள், அப்பொழுது அது யூத யுகத்தின் முடிவாயிருந்தது. எனவே அவர் பல்வேறுபட்ட யுகங்களின் பல்வேறு வகையான முடிவுகளை பல்வேறுபட்டவர்களிடத்தில் குறிப்பிட்டு கூறிக்கொண்டிருந்தார். மேலும் அவர் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் யுகங்களில் அதே காரியம் செய்யப்பட்டிருந்தது என்பதை அவர்களிடத்தில் கூறிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ள தவறிப்போயினர். அவர் பேசிக் கொண்டிருந்ததான சில காரியங்களைக் குறித்து நாம் பார்ப்போம். 54 உதாரணமாக, தேவன் அந்த மனிதனில் இருந்தார் என்பதை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவர் மனிதனாயிருக்க எப்படி தன்னைத் தானே தேவனாக்கிக் கொள்ள முடியும் என்பதே அவர்கள் காணமுடியாமற்போனதற்கான மிகப்பெரிய தடையாய் இருந்தது. தேவன் மானிட சரீரத்தில் எப்படி வாசம் செய்தார் என்பதை அவர்களால் காணமுடியாதிருந்தது. எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலுமே தேவன் எப்பொழுதுமே மனிதனில் வாசம் செய்து வருகிறார். மனிதன் தேவனுடைய பிரதிநிதியாக இருக்கிறான். ஒவ்வொரு சந்ததியிலுமே தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் யாரோ ஒருவரை அல்லது அவர் உபயோகிக்கக்கூடிய ஏதோ காரியத்தை தெரிந்து கொள்கிறார். 55 அவர் அவர்களிடத்தில் ஆபிரகாமைக் குறித்து, இடறுதலாதய் இருந்த அப்படிப்பட்ட ஒன்றை குறிப்பிட்டு கூறினார். அவர், “நீங்கள் உங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும், ஆபிரகாம் உங்களுடைய தகப்பன் என்றும் அழைத்துக் கொள்வீர்களேயானால், அவன் என்னுடைய நாளைக் கண்டான், அதைக் கண்டு களிகூர்ந்தானே. ஆபிரகாம் தீர்க்கதரிசியாயிருந்தானே!” என்று அவர்களிடம் கூறினார். இயேசுவானவர் மேசியாவாய், அவர் அவர்களிடத்தில் இருந்தார் என்று அவர் அவர்களுக்கு நிரூபிக்கும்படியாய், அவர் அவர்களிடத்தில் குறிப்பிட்டு கூறிக்கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் மேசியாவின் அடையாளம் அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தது. எனவே ஒவ்வொரு சந்ததியினூடாகவும் மேசியாவின் அடையாளம் அந்த விதமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அப்படியிருந்து வந்தபோதிலும் அவர் தன்னை தேவனாக்கிக் கொள்கிறார், தம்மை மேசியாவாக்கிக் கொள்கிறார் என்பதே அவர்களை இடறச் செய்தது. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. 56 இப்பொழுது ஆபிரகாம் (அவர்கள் அவனை தங்களுடைய தகப்பன் என்றழைத்தனர்) தேவனை சந்தித்தபோது, அவரும் கூட மாம்சத்தில் இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு கன்றுக்குட்டியின் மாம்சத்தைப் புசித்து, சோள ரொட்டியைப் புசித்து, பாலைப் பருகி, வெண்ணெயை ஆபிரகாமின் முன்னிலையிலே புசித்தார். ஆயினும் அவர் தேவனாய் இருந்தார். ஆபிரகாம் அவரை தேவனென்று அடையாளங்கொண்டு, அவரை, “ஏலோஹிம்” என்றழைத்தான். அது சர்வவல்லமையுள்ள யேகோவா ஆகும். ஒரு மனிதன் ஆடைகளை அணிந்தவராய், தன்னுடைய சரீரத்தின் மேல் தூசியோடு, ஒரு மரத்தின் கீழே நிழலுக்காக அமர்ந்து, மாம்சம் புசித்து, பாலைப் பருகினார். அப்பொழுதும் அந்த குளிர்ந்துபோன, கொடூர இருதயங்கொண்ட, தன்னல யூத நீதிமான்களால் அவர் தேவகுமாரனாய் இருக்க வேண்டும் என்று விசுவாசிக்க முடியவில்லை, ஆனாலும் ஆபிரகாமை தங்களுடைய தகப்பன் என்று அழைத்துக் கொண்டனர். அவர் தன்னுடைய மாம்ச சரீரத்தில் அதே காரியத்தை செய்து கொண்டிருந்தார் என்பதையும், தேவன் அவர்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமை சந்தித்தபோது வேறொரு மாம்ச சரீரத்தில் அதைச் செய்தார் என்பதையும், அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்து கொண்டிருந்தார். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். ஆனால் அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. 57 நீங்கள் பாருங்கள், அப்பொழுது ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தான், ஏனென்றால் அவன் ஒன்றை தெரிந்து கொண்டிருந்தான். அந்த தெரிந்து கொள்ளுதல் இந்த உலகத்தில் பிறந்திருக்கின்ற ஒவ்வொரு நபருக்கு முன்பாகவும் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கு முன்பாகவும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் வைக்கப்பட்டிருக்கிறது. லோத்தும், அவனுடைய சகோதரனின் மகனும், அவர்களுடைய மேய்ப்பர்களும் நிலங்களைக் குறித்து வாக்குவாதம் செய்யத் துவங்கினர். ஆபிரகாம் ஒரு நீதிமானாயிருந்தபடியால், அவர்களிடத்தில், “நமக்குள்ளே வாக்குவாதங்களே இல்லாதிருக்கட்டும், நீ செல்வதற்கான உன்னுடைய வழியை தெரிந்து கொள்” என்றான். அந்த நிலைமை ஒவ்வொரு விசுவாசியினுடைய ஜீவியத்திலும் உண்டாகிறது. அது இந்த காலையில் உங்களுக்கு முன்பாக இருக்கிறது. அது எனக்கு முன்பாகவும் இருக்கிறது. 58 லோத்து பின்வாங்கிப் போகிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவேயில்லை. ஆனால் அவன் காரியங்கள் சுலபமாய் இருந்த சோதோமையை எதிர்நோக்கிச் சென்றான். அநேக சமயங்களில் நாம் சுலபமான வழியையே எதிர்நோக்குகிறோம். “நான் இந்த குறிப்பிட்ட—குறிப்பிட்ட சபையில் சேர்ந்து கொள்வேன். நீங்கள் பாருங்கள், அப்பொழுது எவருமே அதற்கு விரோதமாக எதையும் கூறமாட்டார்கள். ஏனென்றால் அது நகரத்திலே மிகப்பெரிய சபையாக உள்ளது.” சுலபமான வழியாயிற்றே! நாம் அநேக சமயங்களில் அதைச் செய்யும்பொழுது நாம் தவறாகய் இருக்கிறோமே! 59 நினைவிருக்கட்டும், நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றினால், நீங்கள் ஜனங்களால் வெறுக்கப்படுவீர்கள், ஏனென்றால் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். நீங்கள் கிறிஸ்துவண்டை வரவேண்டுமானால், நீங்கள் எந்த சபையின் மூலமாகவோ அல்லது எந்த ஸ்தாபனத்தின் மூலமாகவோ அல்லது எந்த கோட்பாட்டின் மூலமாகவோ வரமுடியாது. நீங்கள் இரத்தத்தினாலே வரவேண்டும். அதுவே உள்ளே வருவதற்காக ஒரு வழியாய் உள்ளது. நீங்கள் உங்களோடு வேறு யாரையும் அழைத்துக் கொண்டு வரமுடியாது. நீங்கள் தனிமையாகவே வந்து, உங்களுடைய சொந்த அறிக்கையிடுதலின் பேரில், உங்களுடைய சொந்த விசுவாசத்தின் பேரில் நிற்க வேண்டும். நீங்கள் போதகரின் பேரில் அல்லது உங்களுடைய சொந்த தாயாரினுடைய விசுவாசத்தின் பேரில் சவாரி செய்ய முடியாது. நீங்கள் தேவனண்டை வரும்பொழுது, நீங்கள் தனிப்பட்ட முறையிலேயே வரவேண்டும். அநேக சமயங்களில் நாம் அந்த மூடத்தனமான தெரிந்துகொள்ளுதல்களைச் செய்கிறோம். 60 லோத்து, அவன் சுலபமான ஒவ்வொரு காரியத்தையும் கண்டபோது…அவன் அங்கே அதிக பணமும், அதிக புகழும் இருந்ததைக் கண்டான். ஏனென்றால் அவன் ஒரு அந்நியனாய், ஒரு அறிவுத்திறன் கொண்ட மனிதனாய், கல்வி கற்றவனாய், அதிக மனோதத்துவம் பயின்றவனாய் இருந்திருப்பான். எனவே அவனால் குறிப்பிட்ட காரியங்களைச் செய்து, அதே சயமத்தில் தன்னுடைய மார்க்கத்தை நிர்வகித்துக் கொள்ள முடிந்தது. அவன், “நான்—நான் தேவனிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறேன், எனவே நான் சோதோமுக்குச் செல்லலாம். நான் கொஞ்சம் கூடுதலாக பணத்தை சம்பாதிக்கலாம், நான் அருமையான பிரசங்கியாய் மாறிவிடலாம்” என்றே எண்ணிக்கொண்டான். பாருங்கள், நீங்கள் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்ய வேண்டும். 61 சபையோரும் ஒரு தெரிந்து கொள்ளுதல் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். “நான் அங்குள்ள இந்த குறிப்பிட்ட சபைக்குச் செல்வேன், ஓ, பட்டணத்தில் உள்ள எல்லோருமே இதுதான் பெரியதாய் உள்ளது என்று கருதுகிறார்களே! ஏன்! பெருநகராண்மைக் கழகத் தலைவரும் இந்த சபையை சேர்ந்தவராயிருக்கிறாரே.” இப்பொழுது, அவன் உண்மையாகவே நன்றாயிருந்த ஒரு சபையைச் சார்ந்து கொண்டிருக்கக்கூடும். ஆனால் எப்போதும் நீங்கள் அந்த சபையையும், அதனுடைய ஜனங்களையும் வேத வாக்கியங்களைக் கொண்டு நியாயந் தீர்க்க வேண்டும். சில நேரங்களில் அவர்கள் அது மக்களின் பாராட்டிற்குரிய விதத்தில் அமைந்துள்ள காரணத்தால், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல ஜனங்கள் நன்றாக உடை உடுத்துகின்ற காரணத்தால் செல்கின்றனர். அங்குதான் நாம் ஒரு—ஒரு முக்கியமான தவறைச் செய்கிறோம். இப்பொழுது இதைக் கவனியுங்கள். 62 ஆபிரகாம் இரண்டாவதாக தெரிந்து கொள்வதை தேர்ந்தெடுத்துக் கொள்வதே, அவன் செய்யக்கூடிய ஒரே காரியமாய் இருந்தது. சில நேரங்களில் முதல் தெரிந்து கொள்ளுதலைக் காட்டிலும் இரண்டாவதாக தெரிந்து கொள்வதே மேலானதாய் இருக்கிறது. அது அந்தவிதமாய் தெரிந்து கொள்ளப்பட்டால் நலமாயிருக்கும். கவனியுங்கள், லோத்து அந்தப் பெரிய நகரத்தை கண்டபோது, அது கால நீடிப்புடையதாய் இருக்கவில்லை, ஏனெனில் தன்னுடைய மனைவி உப்புத்துணாவதை அவன் காணவில்லை. அந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதை அவன் காணவில்லை. ஆனால் ஆபிரகாமோ கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியையே தெரிந்து கொண்டான். அவன் வனாந்தரங்களில் தரித்திருந்தான். 63 அதே சமயத்தில் சாராள் என்ன கூறியிருப்பாளென்றால்…இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், தேசத்திலேயே சாராள் மிகவும் அழகுள்ள ஸ்திரீயாய் இருந்தாள். அங்கே சாராளைப் போல அழகுள்ள ஸ்திரீகளே இல்லாதிருந்தனர். ஒவ்வொருவரும் அவளைக் கண்டபோது, அவளோடு காதல் கொண்டனர். இப்பொழுது அந்தவிதமான ஒரு தெரிந்து கொள்ளுதலை தெரிந்து கொள்வது சாராளுக்கு எவ்வளவு சுலபமாய் இருந்திருக்கும். ஆனால் அவளோ ஆபிரகாமோடு தரித்திருப்பதையே தெரிந்து கொண்டாள். 64 ஓ, ஸ்திரீயே, இதிலும் அதிலும் சேர்ந்து கொண்டு புகழ்பெற்று விளங்குபடி பிசாசு உன்னை குருடாக்க அனுமதிக்க வேண்டாம். நீ கிறிஸ்துவோடு தரித்திரு. ஏனென்றால் வேளையானது சமீபமாய் உள்ளது. சோதோம், கொமோராவிற்கு நேரிட்டதைக் காட்டிலும் பெரிதான அழிவுகள் இந்த தேசத்திற்காக முன்நோக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சோதோம் கொமோராவிற்கே ஒரு நற்பெயர் அமைந்துவிடும். 65 இப்பொழுது ஆபிரகாம் தேவனால் அவனுக்கு அருளப்பட்டிருந்த வழியை தெரிந்து கொண்டபோது, தேசம் வளமற்றதாய் இருந்தது. அவன் செழிப்பாயிருக்கவில்லை. ஆனால் அப்படியிருந்து அவன் தேவனை சேவித்தான். அவன் தேவனை விசுவாசித்தான் என்ற ஒரு காரியத்தை அவன் அறிந்திருந்தான். 66 ஆகையால் ஓர்நாள் மூன்று மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் புழுதியாயும், களைப்படைந்தவர்களாயும் இருந்தனர். எனவே ஆபிரகாம் அவர்களுக்காக மனம் வருந்தினான். அப்பொழுது அவன், “அருகில் வந்து, கொஞ்ச நேரம் அப்படியே சிந்தூர மரத்தின் (Oak Tree) கீழே அமருங்கள்” என்றான். அவன் நின்று அவர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வெறுமனே சாதாரண மனிதர்கள் அல்லவென்பதை அவன் அடையாளம் கண்டு கொண்டான். அவர்களுடைய பேச்சிலேயே, அவர்கள் வித்தியாசமாய் இருந்தனர். ஆபிரகாம் சென்று ஒரு இளங்கன்றைக் கொன்று, அதை சமைத்து, சாராளை அப்பத்தை சுடச்செய்து அவர்களை போஷிக்க ஆயத்தம் பண்ணினான். 67 இப்பொழுது நினைவிருக்கட்டும், அவர்களில் இருவர் தூதர்களாய் இருந்தனர். தூதர்கள் மானிட சரீரத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவர் தேவனாகவே இருந்தார். தேவனாயிருந்த அந்த ஒருவர் கூடாரப்பக்கம் தன்னுடைய முதுகை திருப்பியிருந்தார். 68 சாராள் கூடாரத்தில் இருந்தாள். ஒரு ஸ்திரீ ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவர் வரும்பொழுது, அவளுடைய கணவன் என்ன செய்ய வேண்டும் என்று கூறும்படி வெளியே செல்லாமல், அதைப் போன்ற தன்னுடைய இடத்தில் தங்கியிருப்பதையே நான் காண விரும்புகிறேன். ஆனால் அவள் கூடாரத்தில் இருந்தாள். எனவே ஒருக்கால் அவள் ஏதோ ஒன்றை செய்து கொண்டு அல்லது தட்டுமுட்டு பாத்திரங்களை கழுவிக்கொண்டிர்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை. 69 தேவனாயிருந்த இந்த ஒருவர், சோதோமையே நோக்கியவாறே பார்த்துக்கொண்டிருந்தார். மேலும் அவர் என்ன செய்யப் போவதாக இருந்தார் என்பதை அவர் அவர்களிடத்தில் கூறினார். எனவே இரண்டு தூதர்களும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அங்கே சென்றனர். ஆனால் தேவனாய் இருந்த அந்த ஒருவர் அங்கேயே இருந்துவிட்டார். மேலும், அவர், “எனக்குத் தெரிந்த இரகசியங்களை நான் ஆபிரகாமிற்கு மறைத்து வைக்கப் போவதில்லை. ஏனென்றால் அவன் உலகத்தின் சுதந்தரவாளியாக இருக்கப் போகிறானே” என்றார். 70 ஓ, சபையே, இந்த காலையில் நாம் கர்த்தருடைய வருகையின் இரகசியங்களை அறிந்து கொள்ள உரிமை பெற்றுள்ளோம். ஏனென்றால், “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்க பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” ஆகையால் ஜீவனுள்ள தேவனுடைய சபையானது பூமியை சுதந்தரிக்க வேண்டிடிருப்பதால், அதற்கு எந்த இரகசியங்களுமே மறைக்கப்பட்டிராது. 71 இயேசு, “பிதாவானவர் எனக்கு கூறியிருக்கிற யாவற்றையும் நான் உங்களிடத்தில் கூறியிருக்கிறேன்” என்றார். ஆனாலும் அவர்கள் அவரை விசுவாசிக்க முடியவில்லை. 72 எனவே அவர் அவர்களிடத்தில் ஆபிரகாமின் நாட்களில் நடந்ததை குறிப்பிட்டு கூறிக்கொண்டிருந்தார். மேலும் ஆபிரகாம் அந்த தூதனிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய முதுகு கூடாரப்பக்கமாக திரும்பியிருந்தது என்று அவர் கூறினார். அப்பொழுது அவர் ஆபிரகாமிடத்தில் அவர் ஒரு குழந்தையோடு வரப்போவதாக இருந்ததைக் கூறினார். கூடாரத்தில் இருந்த சாராளோ நகைத்தாள். அப்பொழுது அவர், “சாராள் ஏன் நகைத்தாள்?” என்றார். அவர் என்னத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்? “சாராள் என் நகைத்தாள்?” அது அழிவிற்கு முன்னனான சில மணி நேரங்களாக இருந்தது. அப்பொழுதே அது சம்பவித்தது. சரியாக அழிவிற்கு முன்பாக, வானத்திலிருந்து அக்கினி வந்து அந்த நகரத்தை சுட்டெரிப்பதற்கு முன்பு, அந்த அடையாளம் செய்து காண்பிக்கப்பட்டது. 73 இயேசு, இறைமையியலில் பெரிய திருத்தந்தை பட்டம் பெற்றவர்களிடத்திலும், சரியாக இலட்சக்கணக்கான விசுவாசிகளைக் கொண்டிருந்த பக்தியான ஒரு தேசத்திலும், “நீங்கள் தப்பான எண்ணம் கொள்ளுகிறீர்கள்” என்றார். அவர், “நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணம் கொள்ளுகிறீர்கள்” என்றார். அப்படிப்பட்ட ஒரு சந்ததியில், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனிதர்களாய், வேத பாட பள்ளி சாஸ்திரிகளாய் இருந்து சபையை உருவாக்கினார். ஒரு குழந்தை பிறந்த பொழுது, அது சபையின் உடைமையாயிருந்தது. நீங்கள் ஒரு இஸ்ரவேலராய் இருந்திருக்க வேண்டும். உங்களுடைய பிறப்பிற்கு எட்டாம் நாள் கழித்து விருத்தசேதனம் இருந்தது. அப்பொழுது நீங்கள் துவக்கத்திலிருந்தே இஸ்ரவேலராய் இருந்து வருவீர்கள். வேதத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களினூடாக பயிற்றுவிக்கப்பட்டிருந்த லேவியர்களிடத்தே ஆசாரியத்துவம் உண்டானது. ஆயினும் இயேசு, “நீங்கள் வேத வாக்கியங்களை அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்களே!” என்றார். அவர்கள் கற்கிற தங்களுடைய சொந்த புத்தகத்தில் அவைகளை அறிந்திருந்தனர். அவர்கள் அதை தங்களுடைய மார்க்கரீதியான உபதேசங்களில் அறிந்திருந்தனர். அவர்கள் அதை தங்களுடைய சொந்த வேத சாஸ்திரத்தின் மூலம் அறிந்திருந்தனர். ஆனால் இயேசுவோ, “நீங்கள் அதை அறிந்து கொள்ளவேயில்லை, நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறிந்து கொள்ளவேயில்லை. நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருந்திருந்தால் என்னை அறிந்திருப்பீர்களே, ஏனென்றால் ஆபிரகாம் என்னுடைய நாளைக் கண்டபோது, அவன் களிகூர்ந்தான். ஏனென்றால் அவன் அந்த நாளை முன்னதாகவே கண்டிருந்தான். எனவே நான் அங்கே அவனுக்கு முன்பாக ஒரு மாம்ச சரீரத்தில் நின்று இதை செய்தபோது, அது நான் என்பதை அவன் அறிந்து, அவன் என்னை ‘ஏலோஹிம்’ என்றழைத்தான். ஆனால் நான் இங்கு உங்களுக்கு முன்பாக அதே காரியத்தைச் செய்யும்போது, நீங்கள் என்னை, ‘பெயல்செபூல்’ என்றழைக்கிறீர்கள்” என்றார். “ஓ”, அவர்கள், “ஆபிரகாம் எங்களுக்கு தகப்பானயிருக்கிறார்” என்கிறார்கள். “ஆபிரகாம் உங்களுடைய ‘தகப்பனா’?” 74 அவர்கள், “ஏன், நாங்கள், நாங்கள் சபையை சேர்ந்தவர்களாய் இருக்கிறோம். நாங்கள் ஒரு பக்தியான தேசமாய் இருக்கிறோம். நாங்கள் மகத்தான ஜனங்களாய் இருக்கிறோம். நாங்கள் தேவனுடைய ஜனங்களாய் இருக்கிறோமே!” என்கிறார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் பிசாசாய் இருக்கிறீர்கள். அவனே உங்களுடைய தகப்பனாய் இருக்கிறான்” என்றார். 75 நான் அந்த சந்ததியை இந்த ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்து உரிமை கொண்டாடுகிற இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒரு மேய்ச்சல் தொழில் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடோடி எகிப்திய இரவுக் கதையைப் பற்றி அறிந்திருப்பதைக் காட்டிலும் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். இன்றைக்கு சரியாக கிறிஸ்துவை உரிமை கொண்டாடுவதாக உரிமை கோருகிற இலட்சக்கணக்கான கிறிஸ்தவ புருஷர்களும், ஸ்திரீகளும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் முதல் அடிப்படை மெய்மையே அறியாதிருக்கிறார்கள். அவருடைய நன்மையை ஒருபோதும் ருசித்துப் பார்க்கவேயில்லை. அவர்கள் அவருடைய வல்லமையை ஒருபோதும் உணரவேயில்லை. அவர்களுடைய கண்கள் சத்தியத்திற்கு குருடாக்கப்பட்டிருக்கின்றன. 76 “நீங்கள் குருடராயும், குருடருக்கு வழிகாட்டிகளுமாய் இருக்கிறீகள். குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவருமே குழியில் விழுவார்கள் அல்லவா?” என்று கூறப்பட்டுள்ளது. 77 அப்பொழுதும் அவர்கள், “நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நாங்கள் விசுவாசிகளாய் இருக்கிறோம். நாங்கள் அங்கிருக்கின்ற உயரிய சபைகளை சேர்ந்தவர்களாயிருக்கிறோம். எங்களுடைய ரபிகளோ மிகச் சிறப்பாய் பயிற்றுவிக்கப்பட்ட வேத சாஸ்திரிகளாய் இருக்கின்றனர்” என்று எண்ணிக் கொண்டனர். ஆனால் அதே சமயத்தில் இயேசு அவர்கள் வேத வாக்கியங்களையும் கூட அறிந்திருக்கவில்லை என்று அவர்களிடமே கூறினார். 78 எப்படியாய் தேவன் அதை ஞானிகளின் கண்களுக்கும், கல்விமான்களின் கண்களுக்கும் அதை மறைத்து, கற்றுக் கொள்ளக்கூடிய பாலகருக்கு அதை வெளிப்படுத்துகிறார் என்பதை பார்த்தீர்களா? ஓ, மகத்தான வல்லமை தேவனுடைய எல்லையின்மையாயிற்றோ! அவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்க வாஞ்சிக்கிறவர்களுக்கு அவர் எவ்வளவு நல்லவராய் இருக்கிறார். அவர் ஒரு நன்மையையும் வழங்காதிரார். 79 நம்முடைய தேசத்தையும், நம்முடைய உலகத்தையும் இந்த நாளில் காணும்பொழுது அது அதே காரியத்தினால் சீரழிக்கப்பட்டிருக்கிறதே! 80 இயேசு அவைகளை சரியான முறையில் நேராக்க விரும்பினார். அவர்களோ, “ஓ, ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாய் இருக்கிறார். நாங்கள் மகிமையில் இருப்போம், நீர் அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் நாங்கள் தேவனில் விசுவாசமாயிருக்கிறோம். நாங்கள் மத கோட்பாட்டாளர்களாய் இருக்கிறோம். நாங்கள் தேவனில் விசுவாசமாய் இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய ஜனங்களுக்கு போதிக்கிறோம். இங்கு ஒரு விளங்காத சிறு பண்டைய அடையாளத்துடன் வந்து, அதை தேவன் என்று அழைக்க முயற்சிக்க நீர் யார்? நீர் ஒரு பெயல்செபூலேயல்லாமல் வேறொன்றுமில்லை” என்றனர். அங்குதான் காரியம். அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளையும், தங்களுடைய ஸ்தாபனத்தையும் உடையவர்களாயிருந்தனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பிசாசாய் இருக்கிறர்கள்” என்றார். அதைக்குறித்து சிந்தித்துப் பாருங்கள். 81 நான் அந்த சந்ததியை இதற்கு ஒப்பிட விரும்புகிறேன். இன்றைக்கு நாம் சபைகளில் சேர்ந்து கொள்ளும் இலட்சக்கணக்கானவர்களை உடையவர்களாயிருக்கிறோம். நாம் இலட்சக்கணக்கானவர்களை உடையவர்களாயிருக்கிறோம். தேவன் தம்மை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று புரிந்துகொள்ளும்படி செய்ய, அங்கு அவர் செய்த அதே காரியங்களைச் செய்யும்படியாக, மீண்டுமாக தம்முடைய சபையில் ஜீவிக்க இறங்கி வருகிறார். ஆனால் ஜனங்களோ ஓயாது அதற்கு தங்களுடைய புறமுதுகையே காட்டவும், சிலர் மக்களுடைய பாராட்டுக்குரியதாய் இருக்க வேண்டுமென்றும், சிலர் ஒரு தெரிந்துகொள்ளுதலை தவிர்க்கவுமே விரும்புகின்றனர். அது ஜனங்களிடத்தில் பலவந்தம் பண்ணப்படுகிறதே! நீங்கள் ஒரு தெரிந்துகொள்ளுதலை செய்யத்தான் வேண்டும். நீங்கள் நடுநிலை வகிக்க முடியாது. நீங்கள் உள்ளே வருகிற அதே நபராகவே அந்த வாசாலை விட்டுச் செல்ல மாட்டீர்கள். நீங்கள் அதைச் செய்ய முடியாது. நீங்கள் ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்யத்தான் வேண்டும். இந்த காலையில் கிறிஸ்துவுக்காக அதைச் செய்யுங்கள். 82 சபையைச் சேர்ந்திருந்த ஒவ்வொருவருமே இரட்சிக்கப்படுவர் என்றே அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆனால் இயேசுவோ, “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றார். 83 சபையே இந்த காலையில் நான் உங்களை எச்சரிக்கட்டும். ஜாக்கிரதையாயிருங்கள். இன்றைக்கு நம்முடைய சுயநீதிக்கே, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற மாய்மால சந்ததியின் சுய திருப்திக்கே நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அந்த நேரத்தின் போது புருஷர்களும், ஸ்திரீகளும் சபையில் நின்று, சாய்மான இருக்கைகளில் இருந்துகொண்டு, தேவனுடைய துதிப்பாடல்களைப் பாடிவிட்டு, பின்னர் அந்த சபையிலிருந்து நடந்து வெளியே சென்று, சிகரெட்டுகளை புகைத்து, மதுபானம் குடித்து, கீழ்த்தரமான கேலிப் பேச்சுகளைப் பேசி, தங்களை ‘கிறிஸ்தவர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். புருஷர்களும், ஸ்திரீகளும் பிரசங்க பீடத்திலிருந்து நடந்து அல்லது சபையிலிருந்து, உயிர்த்தெழுதலின் வல்லமையுள்ள இடத்திலிருந்து செல்லும்போது, அங்கே அந்த மாறாத மேசியாவினுடைய அடையாளம் அவர்களுக்கு மத்தியில் அசைவாடிக்கொண்டிருக்கையில், கிறிஸ்தவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாய் இருக்கவில்லையென்றால், ஏதோ காரியம் தவறாய் இருக்கிறது. தேவன் அதை அனுப்புகிறபோது, செய்தித்தாள்கள் அதை ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு முன்னும் பின்னுமாக தீவிரமாக வெளியிடும்போதும், உறைபனி படர்ந்த வடக்குப் பகுதிகளிலிருந்து தென் மண்டல வெப்பமிகுந்த காடுகள் வரைக்கும் அதை தீவிரமாய் வெளியிடும்போதும், ஜனங்கள் ஓயாது அதன் பேரில் தங்களுடைய புறமுதுகையே காட்டுகின்றனர். அப்பொழுது நாம் என்ன கூறமுடியும்? நாம் என்ன செய்ய முடியும்? எனவே நாம், “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று அவர் கூறின வேத வாக்கியங்களுக்கே திரும்பிச் செல்கிறோம். 84 அவர், “நோவாவின் நாட்களில் நடந்துபோல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்” என்றார். கவனியுங்கள், நோவாவின் நாட்களில் உலகமானது கிட்டத்தட்ட இன்றைக்கு உள்ளது போன்ற மக்கட்தொகையை கொண்டிருந்தது. அவர்களுடைய விஞ்ஞானம் நம்முடையதை மிஞ்சுகிறதாய் இருந்து கொண்டிருந்தது. அவர்கள் சிற்குடைய பெண்முக சிங்க உருவச்சிலைகளையும், கூர்நுனி கோபுரங்களையும் கட்டினர். இன்றைக்கு நாம் செய்ய முடியாத காரியங்கள் செய்யப்பட்டன. மேம்பட்ட, மகத்தான, அறிவாற்றலுள்ள ஜனங்களாய் இருந்தனர். நினைவிருக்கட்டும், இன்றைக்கு விஞ்ஞானம், “நள்ளிரவிற்கு ஒரு நிமிடமே உள்ளது” என்று கூறுகிறது. மரண வேளைக்கான மணி அடிப்பதற்கு ஒரு நிமிடமே உள்ளது. அது நாம் நினைக்கிறதைக் காட்டிலும் காலதாமதமாய் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் இதை ஒவ்வொரு விசுவாசியினுடைய இருதயத்திற்குள்ளும் ஆழமாக பதியச் செய்வார் என்று நான் நம்புகிறேன். “நோவாவின் நாட்களைப் போலவே!” 85 நோவாவின் நாட்களில் அந்த சந்ததியிலிருந்து எத்தனை பேர் காப்பாற்றப்பட்டனர்? பல லட்சக்கணக்கானோரில் எட்டுப்பேர். எனவே அவர், “மனுஷ குமாரனுடைய வருகையிலும் அப்படியே நடக்கும்” என்றார். 86 “சோதோமின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரனுடைய வருகையிலும் நடக்கும்.” லட்சக்கணக்கானோரில் மூன்றே பேர் காப்பாற்றப்பட்டனர். 87 அப்படியானல் நீங்கள், “பிரசங்கியாரே, அவரோடு கூட வரப்போகின்ற ஆயிரக்கணக்கானவர்களைக் குறித்து என்ன?” என்று என்னிடம் கேட்கலாம். இப்பொழுது, சகோதரனே, அது அநேக சந்ததிகளினூடாக வந்தடைந்தவர்கள். 88 இந்த சந்ததியிலிருந்து பன்னிரெண்டு பேர் வருவார்களானால், நான் ஆச்சரியமடைவேன். “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” 89 ஓ, நான் சபைகளை அறிவேன். அவைகள் என்ன கூறுகிறதென்றால், “நீங்கள் உங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்துவிட்டால், நீங்கள் இதில் ஒரு அங்கத்தினராகி விடுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் சரியாகி விடுவீர்கள்” என்கின்றன. அதைப் போன்று அப்படிப்பட்ட ஒரு வேத வாக்கியமே கிடையாது. தங்களுடைய பெயரை புத்தகத்திலும், சபையிலும் பதிவு செய்திருக்கின்ற ஒவ்வொருவரும் செல்வார்களானால் அங்கே கோடானகோடி பேர் இருப்பார்களே! எல்லாக் காரியமும் அங்கே உள்ளே செல்லுமே! அப்படியானால் அங்கே பரலோகத்தில் எல்லாவிதமான ஆவிகளும் இருக்குமே! அப்பொழுது பரலோகம் என்னவிதமான நிலையில் இருக்கும்? இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 90 யாராவது ஒருவர் என்னிடம், “இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம், ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இன்னார்—இன்னார், அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை கேட்டேன். எனவே அவர்கள் அதை சென்றடைவார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறலாம். 91 அது அவர்கள் அதைச் சென்றடைவார்கள் என்பதையே பொருட்படுத்தவில்லை. பவுல் 1கொரிந்தியர் 13ல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” என்றான். 92 “ஓ, நான் இன்னார்—இன்னாருடைய கூட்டத்திற்குச் சென்றேன். ஓ, அவர் மகத்தான, வல்லமையான கிரியைகளைச் செய்தார். அவர் குருடர்களை பார்வையடையச் செய்ததை நான் கண்டேன்.” 93 அப்படி செய்திருந்தும் அவர் இழக்கப்பட்டவராய் இருக்கக்கூடும். “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே! நான் உம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறேன் அல்லவா? நான் உம்முடைய நாமத்தில் பிசாசுகளை துரத்தியிருக்கிறேன் அல்லவா? நான் உம்முடைய நாமத்தில் அநேக மகத்தான கிரியைகளை செய்திருக்கிறேன் அல்லவா?’ என்பார்களே. அப்பொழுது அவர், ‘அக்கிரம செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை’” என்பார். “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் க்ண்டுபிடிக்கிறவர்கள் சிலர்,” 94 நான் உங்களை அதிரச்செய்யும் சில கணக்கெடுப்புகளை உங்களுக்குக் கொடுக்கட்டும். சிக்காகோ பட்டிணத்தில் மருத்துவ விஞ்ஞானப்படி, வைத்தியர்களுடைய புள்ளி விவரப்படி, சிக்க்காகோவில் மட்டும் முப்பதாயிரம் கருக்கலைப்பு காரியங்கள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். எத்தனைபேர் இந்த சிறிய போதை மாத்திரைகளையும், மற்ற காரியங்களையும் எடுத்துக் கொண்டு கருக்கலைப்பு காரியங்களைச் செய்கின்றனர்? 95 பரிசுத்த விவாகத்தின் மூலம் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் முறை தவறிப் பிறந்த பிள்ளைகளே அதிகமாய் ஐக்கிய நாடுகளில் உள்ளனர் என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உபாகமம் 14:2-ல் ஒரு வேசிப்பிள்ளை, அதற்கான கால முடிவாக நானூறு வருடங்களை எடுத்துக் கொள்ளும் என்று வேதம் கூறியுள்ளதை எத்தனைபேர் அறிந்துள்ளீர்கள்? அவர்களுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளுடைய, பிள்ளைகளுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளே கர்த்தருடைய சபையில் நிற்கலாகாது. நானூறு வருடங்கள், பத்து தலைமுறைகள். ஒரு தலைமுறை என்பது நாற்பது வருடங்கள். அவர்களுடைய பூட்டனாருடைய, பூட்டனாருடைய, பூட்டனாருடைய, பூட்டனாருடைய, பூட்டனாருடைய, பூட்டனாருடைய பூட்டனாருடைய பூட்டனார் ஒரு வேசிப்பிள்ளையாய் இருந்ததால், இவன் தொடர்பற்றவனாய் இருக்கிறானே! இப்பொழுது என்ன? அது எங்கு மாற்றப்பட்டது என்பதை எனக்குக் காட்டுங்கள். 96 நாம் மீண்டும் தெளிநிலை பெற என்ன செய்ய வேண்டும்? இப்பொழுது வேசிப்பிள்ளைகளோ விபச்சாரத்தின் காரணமாகவும் ஆண்களைப் போலவே பாவமுள்ள ஸ்திரீகள் வீதியில் ஆடையணிந்து செல்லுதல், சிகரெட்டு புகைப்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோரி அழைத்துக் கொள்பவர்கள் தேவனுடைய பார்வையில் அருவருப்பாய் உள்ளனர். தேவனே அத்தகைய விபச்சாரிகளின் கூட்டத்தை தடைசெய்வீராக. அது உண்மை. அப்படியிருந்தும் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறீர்களே? இயேசு, “வாசல் இடுக்கமாயும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லையே. 97 அவர்கள் தங்களைத் தாழ்த்தமாட்டார்கள். அவர்கள் விரைப்பானவர்களாய் இருக்கின்றனர். பாருங்கள், தாவீதுக்கு தான் செய்த தன்னுடைய பாவம் கூறப்பட்டபோது, அவன் உடனடியாக மனந்திரும்பினான். தேவன் அதற்காக அவனை நேசித்தார். ஆனால் நீங்கள் அவர்களிடத்தில் அவர்களுடைய பாவங்களை கூறினால், அவர்கள், “நான் ஒருபோதும் உங்களுடைய வீட்டிற்கு மீண்டும் வரவே மாட்டேன்” என்று கூறிவிடுவார்கள். ஏன்? அவர்கள் செல்வதற்கு ஏராளமான ஸ்தலங்கள் உள்ளன. அவர்களால் அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஆதரவு கொடுக்கும் முறைகேடான ஸ்தலங்களுக்குச் செல்ல முடிகிறது. ஆனால் இதுவோ பிரசங்கிமார்கள் முழுமையாக தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்து, எதனோடும் ஒப்புரவாகாமல், தேவனுடைய வார்த்தையை, சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டிய நேரமாய் உள்ளது. புருஷர்கள் தங்களை தாழ்த்த வேண்டும். 98 கிறிஸ்தவர்கள் மத்தியில் நேர்மையே இல்லை. அவர்களோ, “நான் ஒரு மெத்தோடிஸ்ட்டு, நான் ஒரு பாப்டிஸ்டு, நான் ஒரு பெந்தேகொஸ்தே” என்று கூற விரும்புகிறார்கள். அது தேவனை குறிப்பிட்டு கூறுவதல்ல. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார்—ஆசி.] 99 “நான் அந்நிய பாஷைகளில் பேசினேன். நான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினே.” நாம் அதன் பேரிலேயே முழுவதையும் முக்கியமென கருதுகிறோம். ஆனால் அதுவோ அவர்கள் செய்யக்கூடிய மிக குருட்டாட்டமான காரியங்களில் ஒன்றாய் உள்ளது. நிச்சயமாகவே. மழையானது நீதியுள்ளவர்கள் மேல் பொழிகிறது போலவே அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது. சகோதரன் ராய், மழையானது பயிர் விளைச்சலுக்குப் பொழிவது போன்றே அதேவிதமாய் களைச்செடிகளுக்கும் பொழிகிறது. அதே மழைநீர், அதே பரிசுத்த ஆவியானது ஜனங்களின் மீது விழுகிறது. அது எந்த மாற்றத்தையும்……செய்கிறதில்லை. உட்புறத்திலிருந்து வெளிவரும் அவர்களுடைய இயல்புகளே வித்தியாசமாய் இருக்க வேண்டியதாயுள்ளது. வெளிப்புறத் தோற்றமோ அல்லது வெளிப்புற நடவடிக்கைகளோ அல்ல. ஆனால் உட்புறத்திலுள்ள ஜீவனுள்ள தேவனுடைய ஆவியே அந்த நபரை ஒரு புதிய சிருஷ்டியாக்கி, தேவனுக்கு முன்பாக அவனுடைய இருதயத்தையோ அல்லது அவளுடைய இருதயத்தையோ தாழ்த்துகிறது. 100 நீங்களோ, “பிரசங்கியாரே, உலகில் உள்ள நானூறு கோடி ஜனங்களில், இந்த கோடிக்கணக்கான ஜனங்களில் பன்னிரெண்டு பேர் செல்வார்களா என்று நீர் சந்தேகப்படுவதாக என்னிடம் கூறுகிறீரா?” என்று கேட்கலாம். பன்னிரெண்டு பேர் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றடைவார்களா என்றே நான் சந்தேகப்படுகிறேன். அதைக் குறித்து சிந்தியுங்கள். இங்கே சுவிசேஷத்தில் இயேசுவானவர் என்ன கூறுகிறார் என்பதையே நான் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 101 அதற்கு காரணம் என்ன? ஜனங்களுக்கு மத்தியில் உண்டாயிருக்கிற ஒழுக்கக்கேட்டின் நிமித்தமாக, வேசிப்பிள்ளைகள் பிறக்கத் துவங்கி அவர்களை கறைப்படுத்துகின்றனர். பாருங்கள், நாம் மணிக்கனக்கில் இங்கு நின்று, அந்த காரியங்களை சரிப்படுத்தக்கூடும். அப்பொழுதும் நாம் அழிவுறக்கூடிய நிலையில், ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட நிலையில், முதலிலிருந்து முடிவு வரை சீரழிந்துள்ள ஜனங்களின் சந்ததியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் காணமுடியும். அவர்களால் எந்த அடையாளத்தையும் காணமுடியாமலிருப்பதில் வியப்பொன்றுமில்லையே. அவர்கள் உணர்வற்றவர்களாக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியிருக்கின்றபோதிலும் அவர்கள் அவ்வளவு பக்தியுள்ளவர்களாயும், ஊழியம் செய்வதில் ஆர்வமுடையவர்களுமாயிருக்கின்றனர். 102 இயேசு, “ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி, கடைசி நாட்களில் அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், இச்சடையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவ பக்தியின் வேஷத்தை தரித்தவர்களாயுமிருப்பார்கள்” என்று கூறவில்லையா? புரிகின்றதா? ஓ, நிச்சயமாக உங்களால் சத்தமிட முடியும். நிச்சயமாகவே உங்களால் அந்நிய பாஷைகளில் பேச முடியும். நிச்சயமாகவே விசுவாசத்தினால் பிசாசுகளை துரத்தலாம். ஆனால் நாம் அதைக் குறித்து பேசிக் கோண்டிருக்கவில்லை. 103 அப்படியானால் நீங்கள் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், ஒரு கிறிஸ்தவனின் அடையாளம் என்ன? யார் இரட்சிக்கப்படுவார்கள்? சகோதரன் பிரான்ஹாம் நீர் இரட்சிக்கப்படுவீரா?” என்று கேட்கலாம். நான் அதற்காக தேவனை நம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாது. நான் தினமும் என்னுடைய ஜீவியத்தை வார்த்தையோடு ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது இந்த வார்த்தையோடு சார்ந்திருக்கவில்லையென்றால், அப்பொழுது எங்கோ தவறு உள்ளது. எனவே நான் திரும்பிச் சென்று அதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். 104 “நல்லது”, “சகோதரன் பிரான்ஹாம், ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசும்போது, அது அவர்கள் இரட்சிக்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கவில்லையா?” என்று கேட்கலாம். இல்லை ஐயா. உண்மையாகவே இல்லை. நான் சூனியக்காரர்களும் சூனியக்காரிகளும் அந்நிய பாஷைகளில் பேசுவதையும், எல்லாவிதமான அர்த்தமற்றவைகளையும் கேட்டிருக்கிறேன். அந்நிய பாஷைகளில் பேசுகிற ஜனங்கள் மற்றொரு மனிதனுடைய மனைவியோடு ஜீவிக்கிறதை நான் பார்த்திருக்கிறேன். ஜனங்கள் அந்நிய பாஷையில் பேசி, மேலும் கீழுமாய் குதித்து, வீடே தீப்பற்றிக் கொண்டதுபோல சத்தமிட்டு, பின்னர் வெளியில் சென்று நேர்மையற்ற காரியங்களில் ஈடுபடுவதையும், திருடுவதையும், பொய்யுரைப்பதையும் மற்றும் எல்லாக் காரியங்களையும் செய்வதையும் நான் கண்டிருக்கிறேன். நீங்கள் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? முடியாது ஐயா. 105 அவர்கள் சபையை சேர்ந்தவர்களாய், சபையில் உதவிக்காரர்களாய், ஊழியத்தில் ஆர்வமுடையவர்களாய் இருக்கக்கூடும். ஏன், அவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் வண்டிக்கு எண்ணெயை கூட வாங்குவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை. ஆனால் திங்கட்கிழமையிலே மட்டமான, அருவருப்பான, கீழ்த்தரமான ஏதோ காரியத்தை செய்கிறார்கள். தேவன் வெளிப்புறத்தில் அல்ல, இருதயத்திலே வாசஞ்செய்கிறார். அது இருதயத்திலிருந்து தோன்றுகிற ஒரு காரியமாய் உள்ளது. 106 “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்”. நோவாவின் நாட்களில் இலட்சக்கணக்கானவர்களில் எட்டு பேர் இருந்ததுபோல, சோதோமின் நாட்களில் இலட்சக்கணக்கானவர்களில் மூன்று பேர் இருந்ததுபோல, மனுஷகுமாரனுடைய வருகையிலும் இருக்கும். 107 நாம் அழிவுக்குள்ளாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். மனிதனின் ஒவ்வொரு கற்பனா சக்தியும் எப்படியுள்ளது என்பதை நீங்களே பாருங்கள், அவனை அங்கிருந்தே செயல்படும்படிக்கும், பிசாசு அறிவுத்திறன் கொண்ட பிரசங்கிமார்களை பிரசங்க பீடத்தில் நிற்கச்செய்து, அதனைக் கொண்டே ஜனங்களை எளிதில் தன் வசப்படுத்திக்கொள்கிறான். 108 அன்றொரு நாள் ஒரு நபர், “நான் என்னுடைய பிரசங்க பீடத்தில் உமக்கு இடமளிக்க மாட்டேன். ஏனென்றால் நீர் என்னுடைய ஸ்திரீகளை பைத்தியம் பிடித்தவர்களாக்கி விடுவீர்” என்றார். இல்லை. அவர்கள் ஏற்கனவே அந்தவிதமாக இருக்கிறார்கள். இது அவர்களை அவர்களுடைய சுயபுத்திக்கு திருப்பிக் கொண்டு வரும். எனவே அவர்களை இந்த ஆடைகளையும் மற்ற காரியங்களையும் உடுத்திக்கொண்டே நடக்கும்படிக்கு கூறுங்கள். நல்லது, யாராவது ஒருவர் அதை கூறத்தான் வேண்டும். 109 நான் என்னுடைய மனைவியினிடத்தில், “எனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? நான் பைத்தியக்காரனாய் இருக்கிறேனா? இல்லையென்றால் என்னோடுள்ள காரியம் என்ன?” என்று கேட்டேன். எனக்குள்ளாக இருக்கிற ஏதோ காரியம் அமைதியாய் இருக்கும்படி விடவில்லையே. எனவே நான் அதை கூறவேண்டியதாயிருந்தது. எனவே எத்தகையவர் என்ன கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை. 110 “நீர் உம்முடைய ஊழியத்தை பாழாக்கிக் கொள்ளப்போகிறீர்” என்று கூறுகிறீர்கள். நல்லது, சுவிசேஷத்தைப் பாழ்படுத்தும் எந்த ஊழியம் பாழாக்கப்பட வேண்டியதாய் உள்ளது. தேவனே சத்தியத்திற்காக நின்று, சத்தியத்தைக் குறித்துக் கூற எங்களுக்கு தைரியத்தை தாருமே! அது ஒரு பாவமாய் ஒரு அவமானமாய் உள்ளதே! 111 இயேசு, “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;” என்றார். நீங்களே இலட்சக்கணக்கானவர்கள், மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தேகோஸ்துகளாகிய நீங்கள் எல்லாருமே உள்ளே பிரவேசித்து விடலாம் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அந்நாளில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். இயேசு, “அநேகர் வந்து, பரலோக ராஜ்யத்தில் பந்தியிருந்து, ‘எனக்கு இங்கிருக்க உரிமை உண்டு’ என்று கூறுவார்கள்” என்றார். அவர், “ஆனால் ராஜ்ஜியத்தின் புத்திரரோ புறம்பே தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார். கிறிஸ்தவனே, இந்த காலையிலே அதைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது நல்லது. தங்களுடைய ஜீவியத்தில் முற்றிலுமாக பற்றுறுதி கொண்டு, கிறிஸ்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகிற கோடான கோடிபேர் அந்த வாசலைத் தவறவிட்டு விடுவார்கள். இயேசு அவ்வண்ணமாகக் கூறினார். “எத்தனைபேர் உள்ளே பிரவேசிக்கப்போகிறார்கள்?” 112 எத்தனைபேர் உள்ளே பிரவேசிக்கப் போகிறார்கள் என்பதை நான் அறியேன். “தேவனே, அவர்களில் ஒருவனாயிருக்க என்னை அனுமதியும்” என்பது மட்டுமே காரியமாய் உள்ளது. அதுதான் அது. அவர் நியாயாதிபதியாய் இருக்கிறார். “என்னையும் ஒருவனாக்கும்.” 113 நீங்கள், “அப்படியானால் சகோதரன் பிரான்ஹாம், ஒரு கிறிஸ்தவனாய் இருக்கும்போது, நீங்கள் அதை எப்படி கூறமுடிகிறது?” எனலாம். 114 எனக்குத் தெரியாது. ஆனால் வேதம் கூறுகிறதையே நான் உங்களுக்கு கூறுவேனாக. நிச்சயமாக நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு அனுப்பப்பட்டபோது தேவன் பரிசுத்த ஆவியினூடாக பேசினார். அவர் முதலாவதாக தூதனை அனுப்பினார். அவர், “நகரமெங்கும் உருவப்போய், ஜனங்களுக்கு மத்தியில், அருவருப்புகளுக்காக பெருமூச்சுவிட்டழுது கொண்டும், அந்த காரியங்களை சரிபடுத்திக் கொண்டுமிருக்கிறவர்களுடைய நெற்றிகளில் அடையாளம் போடு” என்றார். 115 அருவருப்பு என்றால் என்ன? ஒரு புருஷனுடைய உடையை ஒரு ஸ்திரீ தரிப்பதேயாகும். அது தேவனை சுகவீனப்படுத்துகிறது. அருவருக்கத்தக்க ஏதோ காரியம் இருக்கின்ற இடத்திற்கு நீங்கள் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? அது உங்களை எவ்வளவாய் சுகவீனப்படுத்துகிறது. நீங்கள் அதனண்டை நிற்கவே முடியாது. ஒரு புருஷனுடைய உடையை ஒரு ஸ்திரீ தரிப்பதும், அதே விதமாகவே தேவனை உணரச் செய்கிறது. நீங்கள் பாடற்குழுவில் பாடலாம். நீங்கள் தினமும் தேவனுக்காக ஜீவிக்கலாம். ஆனால் நீங்கள் தேவனுடைய சமூகத்தில் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். அதைத்தான் சரியாக வேதம் கூறுகிறது. “அருவருப்பாயிற்றே”. அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஆதரவளிக்கிறவர்கள் அப்படிப்பட்ட காரியங்களில் பங்குடையவர்களாக இருப்பார்கள். 116 தேவனே அப்படிப்பட்ட காரியங்களுக்கு எதிர்த்து நிற்கும்படி எங்களுக்கு கிருபையருளும். நீங்களாகவே நிற்க வேண்டியிருந்தால், தேவனுடைய வார்த்தையை உங்களுடைய கரத்தில் பிடித்துக் கொண்டு அங்கு நிற்கக்கூடியவர்களாயிருந்தால் நலமாயிருக்கும். அது ஒருபோதும் தவறிப்போகாது. 117 இப்பொழுது ஜனங்களின் அருவருப்பாயிருக்கின்ற நாளுக்கே நாம் வந்திருக்கிறோம். தூதன் மீண்டுமாய் முத்திரையிட சென்று விட்டார். அதை செய்யப்போகிறது யார் என்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் நலமாயிருக்கும். அதைச் செய்கிற ஒரு நபரை எனக்கு ஜெபர்சன்வில்லில் காண்பியுங்கள். நம்முடைய நகரத்தில் செய்யப்படுகின்ற அருவருப்புகளின் நிமித்தமாக, நம்முடைய நகரத்தில் ஒரு பெரு மூச்சுவிட்டு அழுது, தொடர்ந்து மனக்கவலையடைந்து, சோர்வுற்று, ஜெபித்துக் கொண்டிருக்கிற ஒரு நபரை எனக்கு காண்பியுங்கள். அந்த முத்திரையைப் பெற்றுள்ள ஒரு நபரைக் கூறமுடியும் என்று நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்த முடியுமா? அப்படியானால், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதை கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” என்ற இந்த வேத வாக்கியத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும். 118 ஓ, சபைக்குச் செல்லும் ஏராளமானோரை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். பாடற்குழுவில் பாடும் ஏராளமானோரை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஞாயிறு சிறுவர் வேத பாட பள்ளியில் போதிக்கிற ஏராளமானவர்களை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். பெரிய சங்கங்களில் தலைவர்களாயிருக்கிற சத்தமிடுகிற ஏராளமானோரை, அந்நிய பாஷையில் பேசுகிற ஏராளமானோரை, சுவிசேஷ ஊழியத்தில் ஊழியஞ்செய்கிற ஏராளமானோரை நான் காண்பிக்க முடியும். 119 ஆனால் உலகத்தில் பாவங்களுக்காக தங்களுடைய இருதயத்தில் மிகவும் கவலைப்படுகின்ற ஒருவரை எனக்கு காண்பியுங்கள். இன்றைக்கு எதிர்த்து நின்று அந்த ஸ்தாபனங்களை கடிந்து கொள்ளக்கூடிய ஒரு பிரசங்கியாரை எனக்கு காண்பியுங்கள். அவர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். அவர் தன்னுடைய ஆகார சீட்டின்றி அவமதித்து வெளியேற்றப்படுவார். 120 பில்லி கிரஹாம் ஜேக் மூரிடம், எத்தனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்பதை பார்க்க வேண்டாம் என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. மேலும், “அவர் பாப்டிஸ்டு அல்லவென்றும், அவர் மெத்தோடிஸ்டும் அல்ல பெந்தேகோஸ்தேவுமல்ல என்றும்” கூறினாராம். எனவே, “அவர்கள் எல்லாருமே அவருக்கு எதிராக இருக்கின்றனர்” என்றே கூறினாராம். நிச்சயமாகவே, நான் அதை கூறிக்கொண்டிருக்கவில்லை…நான் அதை இங்கு கூற காரணமென்னவெனில், நான் அதை பொதுமக்களிடத்தில் கூறமுடியாது. எனவே நான் அதை என்னுடைய சொந்த சபையில் கூறுகிறேன். நான் ஒரு போராட்டமுடையவனாக இருந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சோதனையின் நேரம் என் மீது உள்ளது. 121 அவர்கள், “நீர் வருவீரானால், அது சரியாயிருக்கும். ஆனால் நீர் ஸ்தாபனத்தைக் குறித்து எதையுமே கூறக்கூடாது” என்கிறார்கள். நீர் வெறுமனே உம்முடைய காரியத்தை மட்டுமே கூறலாம். 122 தேவன் பிரசங்கிக்கும்படி கூறினதையே நான் பிரசங்கிப்பேன். அது உண்மை. அந்த எட்டு பேர்களில் ஒருவர் எங்கோயிருக்கலாம். அவர்களில் ஒருவர் எங்கோயிருக்கலாம். ஆனால் அந்நாளிலே நான் சில கோட்பாடுகளின் நிமித்தமாக அல்லது சில ஸ்தாபனங்களின் நிமித்தமாக ஒப்புரவாகிவிட்டேன் என்று கூறுகிற குற்றவாளியாயிருக்க நான் விரும்புகிறதில்லை. நான் சத்தியத்தை பிரசங்கிக்கிறேனே! 123 அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம் ஏன் உங்களுடைய ஊழியம் அவ்வளவு மகத்தானதாய் தென்படவில்லை என்றும், மற்ற மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறதுபோல ஏன் அது விரைந்து பரவவில்லை?” என்றும் கேட்கலாம். 124 அங்கேதான் அதன் உண்மை இருக்கிறது. அதுதான் இது. நான் நகரத்திற்குள் செல்லும்போது, அசெம்பிளீஸ் ஆப் காட் சபையார் என்னோடு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை அவர்கள் விசுவாசிக்கிறதில்லை. எப்பொழுதாவது ஒருமுறை ஒன்றை ஏற்றுக்கொள்ளலாம். மெத்தோடிஸ்டுகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? தேர்ந்தாராய்ந்து பார்த்து கண்டறியுங்கள். ஒரு வாரத்திற்கு எனக்கு மேலாளராக இருந்து பாருங்கள். நீங்கள் நகரத்திற்குச் சென்றால், நீங்கள் இயேசுவின் நாமத்திலேயே செல்லுங்கள். அது உண்மை. 125 ஓ, உண்மையாகவே, அவர்கள் உங்களை அங்கே ஏற்றுக் கொள்ளும்போது, நிச்சயமாகவே அங்கே உங்களை எங்கோ ஓர் இடத்தில் அமர்த்துவார்கள். அதனால் நீங்கள் அவர்களோடு அதைப்போன்று எந்த வழியிலுமே தொடர்பு கொள்ளமாட்டீர்கள். அப்பொழுது நீங்கள் புறப்பட்டுச் செல்லும்போது, “ஓ, இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் சற்று மூளை குழப்பியவராய் உள்ளார் என்று உங்களுக்குத் தெரியும். அவரை…” என்பார்கள். 126 நான் பித்து பிடித்தவனாயிருந்தால், அப்பொழுது வேதாகமமும் போதனையில் தவறானதாக இருக்குமே! ஆனால் வேதம் அதைத் தானே கூறியுள்ளது. ஆம் ஐயா. கவனியுங்கள். 127 இயேசு, “நீங்கள் ஏன் என்னை ‘பெயல்செபூல்’ என்று அழைக்கிறீர்கள்? நீங்கள் சாலமோனையும், அவனுடைய பகுத்தறிதலின் அடையாளத்தையும் விசுவாசித்தீர்கள். நீங்கள் அவனுடைய நாளை விசுவாசித்தீர்கள். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து அந்த வரத்தைக் காண வந்தாள். அவள் அதைக் கண்டபோது, அவள் அதை விசுவாசித்தாள். ஆனால் நீங்களோ அதை தினமும் அமர்ந்து பார்த்தும் அதை விசுவாசிக்கிறதில்லை” என்றார். 128 அவருடைய சொந்த சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. “நீர் பண்டிகைக்குப் போம்” என்றனர். அவரோ, “ஆனால் இப்பொழுது நான் போகிறதில்லை” என்றார். அவர் வேறொரு வழியில் சென்றார். ஏனென்றால் அவருடைய சொந்த சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அது உண்மை. “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” 129 அது சீஷர்களிடத்தில் பலப்பரீட்சையை உண்டாக்கினபோது, அவர்கள் எங்கேயிருந்தனர்? அவரோடு சிலுவையண்டையில் ஒரு ஸ்திரீயும், ஒரு மனிதனுமே நின்றனர். யோவானும், மரியாளுமே. மற்றவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். 130 இது பலப்பரீட்சையாய் உள்ளது. இதுவே அந்த நேரமாய் உள்ளது. இதுவே தேவன் காரியங்களைச் செய்கிற வேளையாய் உள்ளது. இதுவே மேசியா பூமியின் மீது இருக்கிற வேளையாய் உள்ளது. இதுவே அவருடைய ஜனங்களின் மத்தியில் தேவனுடைய வல்லமை அசைவாடிக்கொண்டிருக்கிற வேளையாய் உள்ளது. இவர்கள் அவர்களை, “உருளும் பரிசுத்தர்கள், பித்துப்பிடித்தவர்கள், பைத்தியக்காரர்கள்” ஓ, அதைப்போன்று அழைக்கிறார்கள். ஆனால் இதோ வேளையானது வந்துள்ளதே! 131 நிச்சயமாகவே, சில பெரிய ஏமாற்றங்கள் நியாயத்தீர்ப்பில் இருக்கப்போகின்றன. 132 ஓ, கள்ளச்சாராயக்காரன், அவன் நியாயத்தீர்ப்பிலே எங்கேயிருக்கப் போகிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனவே மதுபான வேட்கை கொண்ட அயோக்கியன் எங்கேயிருக்கப் போகிறான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனவே விபச்சாரி எங்கே நிற்பாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். எனவே சூதாட்டக்காரன் எங்கே நிற்பான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனவே குடிகாரனும் எங்கே நிற்பான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவன் ஏமாற்றமடையமாட்டான். 133 ஆனால் தாங்கள் சரியாய் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறவர்களிடத்திலேயே ஏமாற்றம் இருக்கப்போகிறது. அங்கேதான் ஏமாற்றமே. “அவர்கள் அங்கு சென்றடையும்போது, ‘நிச்சயமாகவே, நாங்கள் உம்முடைய நாமத்தில் பிசாசுகளை துரத்தினோமே, நாங்கள் பிரசங்கிமார்கள், நாங்கள் இன்னின்ன—இன்ன சபைகளைச் சேர்ந்தவர்களாயிருக்கிறோம். ஓ, நாங்கள் மகத்தான அற்புதங்களை செய்திருக்கிறோம். ஓ, நாங்கள் பிரசங்கித்தோமே! ஏன், நான் சபையில் ஒரு—நான் ஒரு உக்கிரணக்காரனாய் இருந்து வந்தேனே. நான் கண்காணியாய் இருந்து வந்தேனே. நான் இந்தவிதமாய் இருந்துவந்தேனே’ என்பார்கள். அப்பொழுதோ அக்கிரம செய்கைக்காரர்களே, என்னை விட்டு அகன்று போங்கள், நான் உங்களை ஒருபோதும் அறியேன்” என்பார். அங்குதான் உங்களுக்கு காரியமே உள்ளது. அதுதான் ஏமாற்றம். அவர், “அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் வந்து, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பந்தியிருந்து, ‘நாங்கள் இங்கிருக்க உரிமை உண்டு’ என்று கூறுவார்கள். இவர்களோ புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாகும்” என்றார். “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” 134 என்னுடைய அருமையான ஜனங்களே உங்களைத்தான், இந்த காலையிலே இதற்கு செவி கொடுங்கள். நான் இதை ஒருபோதும் கற்பனையாக கூறவேயில்லை. நான் இதை கூறுவதற்கான உத்தரவாதமுடையவனாய் இருக்கிறேன். நான் அதற்கான உத்தரவாதமுடையவனாய் இருக்கிறேன். நான் என்னுடைய ஜீவியத்தில் மற்றுமொரு பிரசங்கத்தை பிரசங்கியாமற்போனாலும், இது சத்தியமாய் உள்ளது. வெகு சில ஜனங்களே இரட்சிக்கப்படப்போகிறார்கள். அதை அப்படியே நினைவில் கொள்ளுங்கள். வெறுமனே வெகு சிலரே. நீங்கள் அவர்களில் ஒருவராய் இருங்கள். 135 “சகோதரன் பிரான்ஹாமே அவர்கள் யார்?” எனக்குத் தெரியாது. எவருமே அறியார். நாம் நம்முடைய சொந்த இரட்சிப்பிற்காக பயத்தோடும், நடுக்கத்தோடும் செயலாற்றுவோம். 136 ஆனால் நீங்கள் தேவனோடு சரிபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய இருதயம் இந்த வேதாகமத்தோடு இசைந்து செல்லவில்லையென்றால் ஏதோ காரியம் தவறாய் உள்ளது. ஏதோ காரியம் தவறாய் உள்ளது. உங்களுடைய சபை என்ன கூறுகிறது என்பது முக்கியமல்ல. நீங்கள் அதன் மூலமாய் உள்ளே பிரவேசிக்க முடியாது. நீங்கள் தேவன் கூறினதைக் கொண்டுதான் உள்ளே பிரவேசிக்க வேண்டும். நீங்கள் வேதாகமாகிய இந்த புத்தகத்திலிருந்தே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எனவே அதனோடு தரித்திருங்கள். 137 “ஓ,” நீங்களோ, “நல்லது, நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன்” எனலாம். அது சரிதான். அது வேதமாயும் உள்ளது. ஆனால் அந்த ஜீவியம் இதை தழுவியதாயில்லையென்றால் அது ஞானஸ்நானம் பண்ணப்பட்ட உங்களுக்கு நன்மையும் செய்யவேயில்லை. 138 நீங்கள், “நல்லது, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன்” என்று கூறலாம். அது நல்லது, அதைத்தான் நீங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் அங்கு ஜீவனில்லாதிருக்குமானால் பயனில்லையே! 139 நினைவிருக்கட்டும், கோதுமையை வளரச்செய்ய கீழே இறங்குகிற அதே வல்லமையை களையும் பெற்றுக் கொள்கிறது. அந்த களையும் கூட சத்தமிடச் செய்கிறது. முதிர்ந்துபோன களையானது நிமிர்ந்து நின்று கோதுமையைப் போன்றே மகிழ்ச்சியாயிருக்கிறது. அது உண்மை. அது அதே ஜீவனைக் கொண்டு ஜீவிக்கிறது. எனவே ஒரு பாவியும் தேவனுடைய சமூகத்தில் தரித்திருந்து, ஜெயதொனி எழுப்பி, ஒரு கிறிஸ்தவனைப் போல ஜீவிக்க முடியும். ஆனால் இருதயத்தில் ஏதோ காரியம் வித்தியாசமாய் இல்லாதிருக்குமானால் நலமாயிருக்குமே! அவன் பொல்லாத ஆவியைத் துரத்த அதே வல்லமையை பெற்றிருக்கக்கூடும். இயேசு அவ்வண்ணமாய் கூறினார். மற்ற பிரசங்கிமார்கள் பிரசங்கிக்கக்கூடியதற்கு ஒப்பாகவே அவனும் சுவிசேஷத்தை பிரசங்கிக்கக்கூடும். அதைத்தான் சரியாக இயேசு அவ்வண்ணமாக கூறினார். வேதம் அதை போதிக்கிறது. ஆம் ஐயா. “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் என் சொந்த சரீரத்தை ஒரு பலியைப் போல சுட்டெரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும் நான்—நான் மலைகளை பெயர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் இந்த காரியங்கள் எல்லாவற்றையும் செய்தாலும், நான் அவருடைய நாமத்தில் பிரசங்கித்தாலும், நான் அவருடைய நாமத்தில் பிசாசுகளை துரத்தினாலும்,” அவன், “நான் ஒன்றுமில்லை” என்றான். எனவே அவனால் அதை செய்ய முடிந்தும் “ஒன்றுமில்லையே.” அதன் உட்கருத்தை புரிந்து கொண்டீர்களா? 140 இப்பொழுது உங்களுடைய இருதயத்திலிருந்து செய்ய வேண்டிய காரியம் ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதேயாகும். இப்பொழுது இடுக்கமான வாசலில் உட்பிரவேசியுங்கள். ஏனென்றால் கேட்டுக்குப் போகிற வழி விசாலமாயிருக்கிறது. இந்த சந்ததியில் உள்ள கோடானகோடி விசுவாசிகள் அதில் பிரவேசிப்பார்கள். காரணமென்னவென்றால் வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; வெறுமனே நீங்களும் கிறிஸ்துவும் மட்டுமே. 141 “ஜீவனுக்குப் போகிற வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” இப்பொழுது, அது நம்முடைய கர்த்தரின் வார்த்தைகளாய் இருக்கின்றன. என்னே! அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அங்கு நின்று அவர்களுடைய நினைவுகளை வகையறுத்துக் கொண்டிருந்தார். 142 அவர்கள், அவருடைய சொந்த பட்டிணத்தில், “அவன் பெயர் பெயல்செபூல், அப்படியிருக்க அவன் எப்படி தேவனாயிருக்க முடியும்? அவன் ஒரு மனிதனாயிற்றே! இந்த ஞானம் எங்கிருந்து வந்தது?” என்றனர். 143 நீங்கள் இங்கே பட்டிணத்திற்குள்ளாக நடந்து செல்லும்போது அந்த விதமாகவே தென்படும்…நான் ஜனங்களாகிய உங்களுக்கு இதை அவமதிப்பாக கூறவில்லை; நீங்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் என்னை நேசிக்கின்றீர்கள். நீங்கள் இங்குள்ள பட்டணத்திற்குள்ளாக நடந்து செல்லும்போது, சாத்தானின் வல்லமையானது உங்களை அடித்து வீழ்த்துவது போல தோன்றும். இந்த ஸ்தலம் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டிணம் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. 144 பில்லிகிரஹாம் லூயிவில்லில் நுழைந்தபோது, அவர் என்ன கூறினார்? அவர் தன்னுடைய ஜீவியத்தில் எப்போதும் கண்டதில்லையே “அதிகமான சாத்தானின் ஆக்கிரமிப்புக்கொண்ட ஸ்தலமாய்” அது இருக்கிறதாக அவர் கூறினார். அதை செய்தித்தாளில் பிரசுரித்து, “உங்களால் பிசாசின் அட்டூழியத்தை உணர முடியும்” என்றும் கூறினார். 145 உண்மையிலேயே நான் அதை உணருகிறேன், ஏன்? இது என்னுடைய சொந்த பட்டணம். இயேசு தம்முடைய சொந்த பட்டணத்திற்கு திரும்பி வந்தபோது, அவர், “அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவரால் அநேக அற்புதங்களை செய்ய முடியவில்லை” என்றார். மேலும், “ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு பிரசங்கியோ தன்னுடைய சொந்த—தன்னுடைய சொந்த ஊரிலும், தன்னுடைய சொந்த ஜனங்களின் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” என்றார். புரிகின்றதா? உங்களால் அதை தவிர்க்க முடியாது. ஏனெனில் வேதம் அவ்வண்ணமாக கூறுகிறது. புரிகின்றதா? 146 இப்பொழுது, நீங்கள் இங்கு நகரத்தில் நடந்து செல்கின்றீர்கள். எனக்குத் தெரியாது என்பதை என்னிடம் கூறாதீர்கள். நான் ஜனங்களண்டை நடந்து செல்லும்போது, என்னுடைய கரத்தை குலுக்கி, “ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் உம்மை நேசிக்கிறேன்” என்று கூறுகிறார்கள். அது ஒரு பொய் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு பொய் என்பது உங்களுக்குத் தெரியும். தேவனால் இருதயத்தின் வகையறுத்தலையே என்னிடம் கூறமுடியும்போது ஏன் அவரால் என்னிடம் அதை கூறமுடியவில்லை? 147 நிச்சயமாகவே, நகரத்தைச் சுற்றிலுமுள்ள உங்களுடைய சொந்த ஜனங்கள் மத்தியில்தான் அவ்வண்ணமாய் காணப்படுகிறது. அவர்கள் உங்களைக் காணும்பொழுது, “நல்லது உங்களுக்குத் தெரியும். நான் அங்கு இன்னின்ன இன்னதைக் கண்டேனே…” என்கின்றனர். “எங்கே? அது எங்கேயிருக்கிறது?” “அது…” “ஹும்! நாம் அந்த நபரை அறிவோமே!” 148 நீங்கள் அதை உணருகிறீர்கள். நான் உங்களுக்கு கூறட்டும், உங்களுக்கு முழுமையாக விருப்பமில்லாத யாரோ ஒருவரை நீங்கள் உங்கள் வீட்டிலே அனுமதிக்க, அவர் வந்து சற்றுநேரம் உங்களுடைய வீட்டில் அமர்ந்தால் அப்பொழுது நீங்கள் அந்த விநோதமான உணர்வை உணருவீர்கள். இப்பொழுது அந்த உணர்வை பதினான்காயிரத்தால் பெருக்கிக்கொண்டால், அப்பொழுதே நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஆகையால் எல்லோருமே உங்களை நேசிக்கிற ஒரு இடத்திற்கு நீங்கள் செல்லும்போது, அப்பொழுது நீங்கள் அந்த வரவேற்பை உணரும்பொழுது, அப்படியே, ஓ, என்னே, உங்களால் அங்கே எப்பொழுதும் தரித்திருக்க முடியும். பாருங்கள். பாருங்கள் அதுதான் அது. அது ஒரு ஆவியாய் இருக்கிறது. அது என்னவென்பதை ஜனங்கள் அறிந்து கொள்கிறதில்லை. ஜனங்கள் ஏன் அந்த அளவு சீர்கேடடைந்துள்ளனர் என்றே அவர்கள் வியப்புறுகின்றனர். 149 நல்ல ஸ்திரீகளை, நல்ல ஸ்திரீகளை இழிவான ஆடைகளை அணிந்து அங்கே வெளியே செல்லும்படி செய்கிறது எது? இப்பொழுதும் கூட கடுங்குளிராய் இருக்கும்போது, பதினாறு வயதுடைய சிறுபெண் பிள்ளைகளை தங்களுடைய தாயாருக்கு முன்பாக அணியக்கூடாத ஆடைகளுடன் வெளியே வீதியில் செல்லும்படி செய்கிறது எது? அதற்குக் காரணம் அந்தப் பிள்ளையல்ல. (அந்தப் பிள்ளை மேலான எதையுமே அறிந்திருக்கவில்லை) ஆனால் பிரசங்கபீடத்தில் உள்ள ஒரு பிரசங்கியார் தன்னுடைய கடமையின் பாதையை காத்துக்கொள்ள தவறியிருக்கின்றதே காரணமாகும். அது முற்றிலும் உண்மை. நிச்சயமாக. ஸ்திரீகள் வீதியில் பாலுணர்ச்சியை தூண்டும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து மற்றும் அதைப்போன்ற காரியங்களோடு வீதியில் செல்லும்போது பாவிகள் அவர்களையே நோக்கிப் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவள் அந்த மனிதனோடு தவறான வாழ்க்கை நடத்தியது போன்ற குற்றமுற்றவளாயிருக்கிறாள் என்பதை அறியாதிருக்கிறாள். இயேசு அவ்வண்ணமாய் கூறினாரே! இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று, எனவே நியாயத்தீர்ப்புன் நாளிலே அதற்காக பதில் கூறவேண்டியவனாய் இருக்கிறான்” என்றார். வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறதே! 150 நான் ஒரு கண்டிப்பான நபராய் இருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறதை நான் அறிவேன். நான் கண்டிப்பானவனாய் இருக்கவில்லை! நான் உங்களுடைய சகோதரன், நான் உங்களை நேசிக்கிறேன். 151 வருங்கோபத்திற்கு தப்பியோடுங்கள். உங்களுடைய இருதயம் அவருடைய ஆவியனால் நிரப்பப்பட்டு, உலகத்தின் ஒவ்வொரு காரியத்திற்கும், உங்களுடைய புறமுதுகைக் காண்பித்து, அவருக்கு முன்பாக தேவபக்தியாய் நடக்கும்படி, உங்களுடைய இருதயம் அவருக்காக கொழுந்துவிட்டு எரியும்படியாய் சிலுவையண்டை சென்று கதறுங்கள். அன்பு! ஒரு கடமை அல்ல. கிறிஸ்துவை சேவிப்பது ஒரு கடமையல்ல, கிறிஸ்துவை சேவிக்கிறது அன்பாய் உள்ளது. அது உங்களுடைய ஜீவியத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவரோடு ஒழுங்காய் இசைந்து செல்லும்படி உங்களை வலிந்து இழுக்கிறது. அது உங்களை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துகிறது. அப்பொழுது நீங்கள் பாவத்தை காண்கிறீர்கள். 152 அவர் பூமியின் மீது கண்ணீர் விட்டார். தேவன் நோவாவின் நாட்களில் மனித இருதயங்களை கண்டபோது அது அவரை விசனப்படுத்தியது. இயேசு மலையின் மீது அமர்ந்து, “எருசலேமே, எருசலேமே நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகலைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், ஆனால் உங்களுடைய வேளை வந்திருக்கிறது. உங்களுடைய வீடு பாழாக்கிவிடப்படும்” என்றார். 153 தேவ குமாரனுடைய வருகையிலும் அவ்வண்ணமாகவே இருக்கும். உண்மையான விசுவாசிகளின் மெய்யான இருதயங்கள் நொருங்குண்டுபோம். இப்பொழுதே ஒரு எழுப்புதல் இந்த தேசத்தை துடைத்தெடுக்க வேண்டுமென்றே அவர் பார்க்கிறார். ஆனால் ஒரு கூட்ட வேசிப்பிள்ளைகளினூடாக அது எப்படி சம்பவிக்கக்கூடும்? அவர்கள் துவக்கித்திலேயே ஆக்கினைக்குட்படுத்தப்பட்டிருக்கும்போது அது எப்படி சம்பவிக்கக்கூடும்? 154 தேவனுடைய இராஜ்யம் ஒரு மனிதன் ஒரு வலையை கடலில் வீசுகிறதற்கு ஒப்பாய் இருக்கிறது. அவன் அதை இழுக்கும்போது அவன் அதில் ஆமைகளையும், உணவு ஆமைகளையும், பாம்புகளையும், தவளைகளையும், சில மீன்களையும் உடையவனாயிருக்கிறான். அவைகளை அவன் தீர்மானிப்பதில்லை. அவன் வெறுமனே கரையின் மேலிருந்து அதை வீசுகிறான். அதைத்தான் சுவிசேஷம் செய்கிறது. அந்தவிதமாகவே பில்லிகிரஹாமும், ஓரல் ராபட்ஸும், நானும் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிற எல்லா பிரசங்கிமார்களும் அதை வீச, பின்னர் அதை உள்ளே இழுக்கின்றோம். அப்பொழுது, “கர்த்தாவே, அவைகள் அங்கிருக்கின்றன.” ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு முன்னமே நாங்கள் கண்டறிந்து கொள்கிறோம். எனவே அவைகள் மீண்டுமாக குளத்திற்குள்ளாகவே சென்று விடுகின்றன. அது என்னவாயிருக்கிறது? அது துவக்கத்திலேயே ஒரு ஆமையாய் இருந்தது. அது சுவிசேஷ வலைக்குள் பிடிக்கப்பட்டபோது அது அதனை மாற்றிவிடவில்லை. அது துவக்கத்திலேயே ஒரு ஆமையாய் இருந்தது. அது துவக்கத்திலேயே ஒரு உணவு ஆமையாய் இருந்தது. அது துவக்கத்திலேயே ஒரு பாம்பாய் இருந்தது. அவன் சபைக்குள்ளாக வருவதற்கு முன்னமே ஒரு மாய்மாலக்காரனாய் இருந்தான். எனவே அவன் தன்னுடைய குடிப்பழக்கத்தை, சூதாட்டத்தை, புகைப்பிடிப்பதை, பொய்யுரைப்பதை, திருடுவதை, விட்டுவிட வாஞ்சையற்றவனாய் இருந்தான். அவன் நரகத்தைக் குறித்த ஒரு பயபக்தியினிமித்தமாக வெறுமனே உள்ளே வருகிறான். நீங்கள் அந்தவிதமாய் சேர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் உங்களுக்கு அதில் அதிக நபர்களையே சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” நாம் ஜெபம் செய்வோமாக. 155 கர்த்தாவே, ஓ, கர்த்தாவே என்னை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே, இப்பொழுதே என்னுடைய வழக்கை சோதித்தறியும். இந்த விதமாய் பிரசங்கித்த பிறகும் உமக்கு முன்பாக நியாயத்தீர்ப்பின் முன்வரும்படி என்னை விட்டுவிடாதேயும். ஓ, எனக்குள்ளாக ஏதாவது அசுத்தமான காரியம் இருக்குமாயின், கர்த்தாவே, தயவுகூர்ந்து அதை எடுத்துப் போடும். நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற நாளை நாங்கள் காண்கிறோம். புருஷர்களும், ஸ்திரீகளும் மிகவும் விரைப்புள்ளவர்களாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெட்கப்படுகின்றனர். நீர் ஒருமுறை, “சீயோன் குமாரத்திகளுக்கு மத்தியிலே வெட்கமும் கூட உண்டாயிருப்பதில்லை” என்றீர். அவர்கள் இனி ஒருபோதும் வெட்கமே அடையாத அளவிற்கு அவர்களுடைய நாணம் அவ்வளவாய் எடுத்துப் போடப்பட்டிருக்கிறது. ஓ, கர்த்தாவே அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறோம். பெரிதான அழிவு வருவதற்கு அக்கரையிலே உள்ள காலக்கடிகாரம் அடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், பெரிதான அழிவு வருவதற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களே உள்ளன என்பதையும் அறிவோம். ஆகையால் அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். 156 தேவனே, இந்த காலையில் எங்கள் எல்லோரையும் விழிப்பூட்டும். கர்த்தாவே, எங்களை நடுக்கமுறச் செய்யும். நாங்கள் அடையாளங்கள் தோன்றுகிறதை காண்கிறோம். நாங்கள் அதை அறிந்து கொள்ளும்படியாக எங்களுடைய கண்கள் திறக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. கர்த்தாவே, கோடான கோடி பேர் தங்களுடைய புறமுதுகைக் காட்டிக்கொண்டு சென்று விட்டதை நாங்கள் காண்கிறோம். ஓ, கர்த்தாவே என்னால் என்ன செய்ய முடியும், என்னால் என்ன செய்ய முடியும் என்றே நான் வியப்புறுகிறேன். கர்த்தாவே, ஏதாகிலும் காரியம் உண்டா? அதற்கு அதிகமான பிரசங்கமோ, அதிகமான ஜெபமோ, வேறெந்த காரியமாவது அதிகமாய் தேவைப்படுகிறதாயிருந்தால், கர்த்தாவே நான் அந்த செய்தியை ஜனங்களண்டை கொண்டு செல்லும்படி எனக்கு உதவி செய்யும். நான் என்ன செய்யக்கூடும்? ஆனால் அவர்களோ அதை தொடர்ந்து நிராகரிக்கின்றனர். நீர் உம்முடைய மகத்தான அடையாளங்களை செய்கிறீர். நீர் உம்முடைய அதிசயங்களை செய்கிறீர். நீர் உம்முடைய அதிசயங்களை நிகழ்த்துகிறீர். ஆயினும் ஜனங்களோ அதைக் காணாமல் செல்கின்றனர். உம்முடைய வேத வாக்கியம் நிறைவேற்றபட வேண்டுமா? “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்ற அந்த நேரமாய் உள்ளதா? தேவனாகிய கர்த்தாவே இந்த காலையில் ஜனங்களை விழித்தெழச்செய்து, இந்த பூமிக்குரிய கடைசி அடையாளத்தைக் காணச் செய்யும். தேவனே நீர் ஜனங்களுக்கு ஏதோ ஒன்றை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 157 இந்த காலையில் இங்குள்ள இந்த சிறு ஜனக்கூட்டத்தை ஆசீர்வதியும். தேவனே சகோதரன் நெவிலை முதலில் ஆசீர்வதியும், கர்த்தாவே. அவருடைய சரீரத்தை சுகப்படுத்தும். கர்த்தாவே அவர் இந்த காலையில் சுகவீனமாய், வயிறு நிலை குலைந்துபோன நிலையில் உள்ளார். உம்முடைய சுகமளிக்கும் கரம் அவர் மீது இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவருடைய ஆத்துமாவை எழுச்சியுறச்செய்யும். 158 தேவனே, இந்த சபையோர் மத்தியில் கிரியை செய்யும். இங்கு அமர்ந்திருக்கின்ற புருஷர்களையும், ஸ்திரீகளையும் நான் மீண்டும் காணாமற் போனால், அப்பொழுது நான் அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால், “வாசல் இடுக்கமாயும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றே உம்முடைய வார்த்தையை வாசித்திருக்கிறேன். ஓ, கர்த்தாவே, இவர்கள் அந்த “சிலராய்” இருக்கட்டுமே, கர்த்தாவே அவர்களில் சிலராய் இருக்க நீர் இவர்களை அனுமதிப்பீரா? இங்குள்ள ஒவ்வொரு நபரும் அவ்வாறிருக்க அருளும். 159 ஒரு மனிதனால் ஜெபிக்க மட்டுமே முடியும் என்ற காரணத்தால் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும்பொருட்டு, எனக்காக இந்த ஜனங்களுக்கு ஏதாவது காரியத்தைச் செய்யும். நான் பசியாயிருந்தால், அவர்கள் என்னை போஷிப்பார்கள். எனக்கு ஒரு சூட்துணி தேவைப்படுகிறதென்றால் அவர்கள் அதை வாங்குகிறார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து சென்று, சுவிசேஷத்தை பிரசங்கிக்க எனக்கு ஒரு காரை வாங்குவார்கள். அவர்கள் அந்தவிதமாக எதையாவது செய்வார்கள். ஓ, பிதாவே இந்த காலையில் அவர்களுடைய ஆத்துமாக்களை ஆராயும், தயவு கூர்ந்து அதைச் செய்யும். அவர்களும் அதை உமக்கு முன்பாக ஆராய்ந்து பார்க்கச் செய்யும். எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன். கர்த்தாவே என்னையும் கூட அங்கிருக்கச் செய்யும். நான் அங்கு இருக்கக்கூடாதபடிக்கு ஏதாவது காரணம் இருக்குமாயின், கர்த்தாவே, நீர் அதை எனக்கு வெளிப்படுத்தும், நான் அதை இப்பொழுதே சரிசெய்து கொள்ளுவேன். கர்த்தாவே நான் அந்த காலையில், நிச்சயமாகவே தொல்லையில்லாதிருக்கும் ஆற்றண்டையிலே இருக்க விரும்புகிறேன். நான் அந்த நாளில் செல்ல விரும்புகிறேன். அது எப்பொழுது சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதே சமயத்தில் அது இன்றைக்கும் இருக்கலாம். ஆகையால் அதை அறிந்துகொள்ளும்படி எனக்கு உதவி செய்யும். அதை அறிந்து கொள்ளும்படி இந்த ஜனங்களுக்கு உதவி செய்யும். 160 எங்களுடைய இருதயங்கள் அக்கறையற்றிருப்பதையே நாங்கள் காண்கிறோம். ஓ, நாங்கள் வானொலியில் ஒரு நல்ல செய்தியை கேட்டு மகிழ்கிறோம் அல்லது சபைக்கு செல்ல மகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் ஒரு நல்ல செய்தியை பாராட்டுகிறோம். ஆனால் நாங்கள் ஏதோ ஓரிடத்தில் இயேசுவைக் குறித்துப் பேச அக்கறை எடுத்துக் கொள்ளுகிறதில்லை. ஆனால், கர்த்தாவே, பாவமானது எங்களுக்கு மிகுந்த ஒரு பாரமாகி, அது எங்களுடைய கண்களுக்கு கண்ணீரைக் கொண்டுவரும்படியாய், நகரத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு அருவருப்பிற்கும், காரியத்திற்கும் எதிராக நின்று பெருமூச்சிட்டு அழச்செய்கிறதா? கர்த்தாவே, தேவனுடைய தூதனானவர் அதை எங்கள் மேல் கண்டு, எங்களை முத்திரையிடுவாராக. அதை அருளும் கர்த்தாவே. 161 கர்த்தராகிய இயேசுவே வாரும், இப்பொழுதே எங்களுடைய இருதயங்களை ஆயத்தப்படுத்தி, நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர் என்ற உம்முடைய உண்மையான அடையாளங்களை எங்களுக்குத் தாரும். அப்பொழுது நாங்கள் இந்த சந்ததியின் முடிவுக்கு முன்பான கடைசி அடையாளத்தை பெற்றுக் கொண்டிருக்கிறோம்—பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம். 162 நாங்கள் முறைகேட்டுத்தன்மையக் காண்கிறோம். தேசத்தில் வசிக்கிற மனிதனுக்கு வேறொரு மனிதனுடைய மனைவிகளின் மூலம் பிள்ளைகள் பிறக்கின்றனர். சிறு பெண்கள் வீதியிலே சுற்றுவதினால், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானவர்கள் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டு, பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்கள் தாய்மார்களாகின்றனர். எனவே மதிப்பே இல்லாதிருக்கிறது. எப்படியாய் ஸ்திரீகள் தங்களை புகை பிடிப்பதினாலும், குடிப்பதினாலும், பிள்ளைகளின் சிந்தைகளை கெடுத்துக் கொண்டிருக்கிற தொலைக்காட்சிகள் போன்றவற்றினாலும் மனதை தவறான வழியில் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஓ, கர்த்தாவே, அது எவ்வளவு காலம் நிலைத்திருக்க முடியும்? நீர் ஒருவரே பரிசுத்த தேவன். 163 ஓ, பிதாவே, நான்—நான் துரிதமாக ஏதோ காரியம் செய்யப்பட வேண்டும் என்பதை இன்றைக்கு வினோதமாக உனர்ந்து கொண்டிருக்கிறேன், கர்த்தாவே. என்ன கூறவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கர்த்தாவே, என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து எங்களுடைய இருதயங்களில் நீர் குறித்துணர்த்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே இந்தகாரியங்களை அருளும். நாங்கள் அவைகளை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 164 வேளையானது சமீபமாயிற்று. உணர்வோடு விவேகத்தைப் பெறுகிற ஒவ்வொரு நபரும் ஏதோ காரியம் சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறான். இந்த கட்டிடத்தில் சரியான சிந்தையோடு ஒரு நபரும் இல்லை. ஆனாலும் இந்த உலகமானது இந்த நிலைகளின் கீழே நிலைத்திருக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறேன். நண்பர்களே, நாம் நீடித்திருக்க முடியாது. உங்களுடைய போதகர் என்பதினாலோ, உங்களுடைய சகோதரன் என்பதினாலோ ஒரு காரியமும் கிடையாது. இந்த காலையில் நான் உங்களை இயேசு கிறிஸ்துவண்டை வழிநடத்தக்கூடியதை தவிர வேறொரு காரியமும் இல்லை. எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிப்பதற்கு முன்னர் நிறைவேற வேண்டிய காரியங்கள் தீர்க்கதரிசனமாய் உரைககப்பட்டிருகின்றதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். அதைக் குறித்து நான் அறிந்துள்ள ஒவ்வொரு காரியமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 165 “நீங்கள் மிருகத்தின் முத்திரையைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம். அது உபத்திரவத்தில் வரவேண்டியதாய் இருக்கிறது. அப்பொழுது சபையானது சென்றுவிட்டிருக்கும். இந்த முத்திரையை பெற்றுக் கொள்ளாதீர்கள். இவைகள் முத்திரையிடப்பட்டிருக்கின்றன, பாருங்கள் இப்பொழுதே முத்திரையிடுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முத்திரையிடுதல் எவ்விதமான முத்திரை என்பதை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றது. தேவனண்டை ஓடுங்கள், அவரண்டை விரைந்து ஓடுங்கள். 166 இந்த காலையில் நாம் இங்கு அப்படியே ஒரு நிமிடம் காத்துக் கொண்டிருக்கையில் நான் வியப்புறுகிறேன். நீங்கள் உணர்வது போன்றே நானும் உணருகிறேன். உங்களுடைய உணர்வை என்னால்—என்னால் புலன் உணர்வால் அறிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒவ்வொருவரும், “ஓ, தேவனே என்னை ஆராய்ந்தருளுமே!” என்றே நினைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். நானும் கூட அந்தவிதமாகவே உணர்கிறேன். நண்பனே, இந்த செய்திகள் அந்தவிதமானது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். இது ஜனங்களுக்கு மத்தியில் பாராட்டைப் பெற்றதாயிருக்காது. நீங்கள் அவர்களை கண்டனம் செய்கிறீர்கள். நீங்கள்…நீங்கள்—நீங்கள் அவர்களை அப்படியே இழிவுள்ளவர்களாக்குகிறீர்கள். யாராவது ஒருவர் அதை செய்யத்தான் வேண்டும். ஒருக்கால் அதை யாராவது செய்து கொண்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அதைச் செய்வது என் மேல் விழுந்த கடமையாயிருக்குமானால், நான் ஸ்திரீகளை சுத்தப்படுத்த வேண்டியவனாயிருந்தால், நான் சுத்தப்படுத்துவேனாக. நான்…தாவீது, “ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதை பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தில் மிதியடியாய் இருப்பதையே தெரிந்து கொள்வேன்” என்றார். அது உண்மை. நீங்கள் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறது எதுவோ அதையே செய்யுங்கள். வெட்கப்படாதீர்கள். 167 நினைவிருக்கட்டும், அது ஒரு மகத்தான காரியம் என் அறிந்திருக்கிறேன். “சகோதரன் பிரான்ஹாம், எட்டு ஆத்துமாக்கள் மட்டுமே இரட்சிக்கப்படும் என்று நீர் கூறுகிறிரா?” என்று கேட்கலாம். 168 எத்தனைபேர் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை நான் அறியேன், நான் உங்களுக்கு கூறமுடியாது. ஆனால் நான் ஒரு காரியத்தை கூறுகிறேன்; இதைப் போன்றே அந்நாளில் அவர்கள் வெகு சிலராய் இருப்பர். அவர் இருந்த அந்த நாளில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டிருந்தனர். நோவாவின் நாளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், லோத்து—லோத்துவின் நாளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் எல்லோரையும் குறித்து நினைத்து பாருங்கள். அவர், “மனுஷகுமாரன் வருங்காலத்திலும் அப்படியே நடக்கும். காரணம், வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது” என்றார். நீங்கள் பாருங்கள், நீங்கள் மட்டுமே அவரோடு உள்ளே செல்வீர்கள். அவ்வளவுதான். புரிகின்றதா? “அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” அதுவே சுவிசேஷ சத்தியமாய் இருக்கிறது என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்து அவ்வண்ணமாய் கூறினார். “அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” வெகு சிலரே. அந்த வெகு சிலரில் ஒருவராய் இருங்கள். அது கடினம் என்பதை நான் அறிவேன். அது விடாமுயற்சியாயுள்ளது. அது என்னை, அதை கூறும்படி கட்டாயப்படுத்துகிறது. அது உங்களுக்கான ஒரு மானிட அன்பின் உணர்வாய் உள்ளது. ஆனால் தேவனுடைய அன்பு உங்களிடத்தில் கூறும்படி என்னை கட்டாயப்படுத்துகிறது. 169 இப்பொழுது ஆபிரகாமின் நாட்களில் கிரியை நடப்பித்த அதே பரிசுத்த ஆவியானவர், கிறிஸ்துவின் நாட்களில் கிரியை நடப்பித்த அதே பரிசுத்த ஆவியானவர், அதே காரியத்தை இங்கு செய்வதாக வாக்குப்பண்ணினார். அவர் இங்கிருக்கிறார். அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டவராயிருக்கிறார். 170 நான் என்னுடைய வார்த்தையை காத்துக் கொள்ளவில்லையென்றால், நான் என்னுடைய வார்த்தையை சார்ந்த ஒரு மனிதன் அல்ல. நீங்கள் உங்களுடைய வார்த்தையைச் சார்ந்த ஒரு மனிதன் அல்ல. இப்பொழுது, நான் ஏதோ ஒரு காரியத்தை உங்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால் என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால்—ஆனால் அப்பொழுது நான் வந்து உங்களிடம் கூறுவேன். நான் உங்களிடத்தில் ஏதோ ஒன்றை கடனாக பெற்றிருந்து, உங்களிடத்திலிருந்து மறைந்து கொண்டால், அப்பொழுது நான் ஒரு மாய்மாலக்காரனாயிருக்கிறேன். நான் உங்களிடம் வந்து, “நான் உங்களிடத்தில் கடன்பெற்றுள்ளேன், ஆனால் என்னால் அதை உங்களுக்கு திருப்பி செலுத்தமுடியவில்லை, ஆயினும் என்னால் முடிந்தளவு அதைச் செலுத்த முயற்சிப்பேன்” என்று கூறினால், அப்பொழுது நீங்கள் என்னை மன்னித்து எனக்கு உதவி செய்வீர்கள். புரிகின்றதா? 171 நாம் யாவரும் தேவனிடத்தில் ஏதோ ஒன்றிற்கு கடன்பட்டுள்ளோம். நாம் நம்முடைய ஜீவியங்களை அவரிடத்தில் கடனாகப் பெற்றுள்ளோம். நாம் அதைக் குறித்து உண்மையாய் இருப்போமாக. வெளியே நடந்து…“நல்லது, இப்பொழுது பாருங்கள், நான்—நான் பிரஸ்பிடேரியன், நான் மெத்தோடிஸ்டு, நான் பெந்தேகோஸ்தே. நான் தேவனுடைய சபை, நான் நசரேயன், நான் யாத்திரீக பரிசுத்தர்” என்று கூறாதீர்கள். அந்தவிதமாய் எண்ணிக்கொள்ளாதீர்கள். அவைகளில் கோடிக்கணக்கானவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஒரு கிறிஸ்தவனாய் இருங்கள். 172 எத்தனைபேர், “சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுது ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள், நான் கரம் உயர்த்த விரும்புகிறேன்” என்று கூறுவீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 173 கர்த்தாவே, நீர் அவர்களுடைய கரங்களை காண்கிறீர். இங்கே இந்த காலையில் இந்த கட்டிடத்தில் மகத்தான பரிசுத்த ஆவியானவர் அமைதிப்படுத்தியிருக்கின்ற வேளையாய் உள்ளது. நான் உம்முடைய பிரசன்னத்தை உணருகிறேன். நீர், “கர்த்தராகிய நான் அதை நட்டிருக்கிறேன், அதை எவரும் என்னுடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ளாதபடிக்கு நானே அதற்கு இரவும், பகலும் நீர் பாய்ச்சுவேன்” என்ற உம்முடைய வார்த்தையை கனப்படுத்த வேண்டியவராய் இங்கு இருக்கிறீர் என்பதை நான் தெளிவாக உணருகிறேன். நீர் ஒரு நோக்கத்தை நிறைவேற்றவே உம்முடைய வார்த்தையை அனுப்பினீர். எனவே கர்த்தாவே அது—அது அதை நிறைவேற்ற வேண்டும். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று வேதம் கூறுகிறது. 174 அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. உம்முடைய நாட்களில் இருந்த அந்த ஜனங்களால் உம்மில் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்பதை விசுவாசிக்க முடியவில்லை. நீர் (ஒரு மனிதனாயிருக்க) உம்மை தேவனாக்கிக் கொண்டீர் என்று கூறினீர். நீர் கன்னிப்பிறப்பாய் இருந்தீர், எங்களுடைய பாவங்களிலிருந்து எங்களை மீட்கவே பூமிக்கு தேவ குமாரனாய் வந்தீர். காரணம் அவர்கள் தேவனுடைய ஆவியானது உமக்குள் இருந்ததைக் கண்டனர். எனவே அவர்கள் வித்தியாசப்படுத்த முயற்சித்தனர். கர்த்தாவே நீர் அவர்களிடத்தில், “இந்த கிரியைகளை செய்கிறது நானல்ல. என்னிடத்தில் வாசமாயிருக்கிற என் பிதாவானவரே இந்த கிரியைகளை செய்துவருகிறார். அவரே கிரியைகளை செய்கிறார். நீங்கள் ஆபிரகாமை உங்களுடைய ‘தகப்பன்’ என்று அழைத்துக் கொண்டால், ஆபிரகாம் என்னுடைய நாளைக் கண்டானே!” நிச்சயமாகவே அவன் கண்டான்; அவன் அருகில் நின்று கொண்டிருந்தபோது அவர் செய்த கிரியைகளையும், அடையாளத்தையும் கண்டான். “அவன் என்னுடைய நாளைக் கண்டு களிகூர்ந்தான்” என்றீர். மேலும், “நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். எப்படியாய் தேவன் ஒரு கன்னியின் மீது நிழலிட்டு, (ஒரு கன்னிப்பிறப்பின் மூலம்) ஒரு குமாரனை பிறப்பித்து, அந்த ஒரு மனிதனுக்குள்ளாக, அவருடைய பரிபூரண வல்லமையானது அவருக்குள்ளாக வாசம் செய்தது” என்று கூறினீர். 175 எப்படியாய் நீர் ஒரு பலியாக தந்த அந்த சரீரத்திலிருந்து அதே இரத்தத்தை நீர் எடுத்து, நீர் ஜனங்களுக்குள் ஜீவிக்கும்படி சுத்திகரித்து, முடிவுபரியந்தம் உம்முடைய கிரியை தொடர்ந்து செய்ய முடிகிறது. ஓ, தேவனே, அதை காணும்படி ஜனங்களை விழித்தெழச் செய்யும். இதை செய்தருளும். தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரையும் இரட்சியும். அவர்களுடைய இருதயங்களை சுத்திகரியும். கர்த்தாவே, என்னுடைய கரங்களும் மேலே இருக்கின்றன. ஓ, கர்த்தாவே, என்னையும் சுத்திகரியும். இது ஒரு திருத்தும் வீடாய் இருக்கிறது. நாங்கள் கழுவப்பட வேண்டிய ஒரு ஸ்தலமாய் இது உள்ளது. பரிசுத்த ஆவியானவர் இந்த காலையில் எங்களை கழுவி, அழிவிலிருந்து எங்களை சுத்திகரிப்பாராக. 176 கர்த்தாவே, உம்முடைய ஆவியினால் நிரப்பப்படாமல் ஒரு நபரும் இங்கிருந்து செல்லக்கூடாது என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். ஒருக்கால் அது சம்பவிக்கிறபொழுது வெளிப்புறத்திலிருந்து ஒரு உணர்ச்சி வேகமும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் கர்த்தாவே, உட்புறமாகச் சென்று, மனத்திரையை அகற்றி, நாங்கள் யாராக இருக்கிறோம் என்பதை எங்களுக்கு காண்பியும். அதை அருளும். அப்பொழுது உம்முடைய ஆவியினால் எங்களை நிரப்பும். ஒரு உண்மையான, உத்தமமான இருதயமுள்ளவர்களாக்கும். இந்த துன்ப நேரங்களிலும், கடுமையான சோதனைகளிலும் நாங்கள் நடந்து செல்கையில் நீரே எங்களுக்கு அன்பானவராகவும், இனிமையானவராகவும் காணப்படும் அந்த நாளுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். நகரத்தின் பாவங்களுக்காக எங்களுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகையில் பரிசுத்த ஆவியானவர் நோக்கிப் பார்த்து, “நான் முத்திரையிடக்கூடிய ஒருவன் இருக்கிறான். அவன் என்னுடையவன், அவள் என்னுடையவள்” என்று கூறுவாராக. கர்த்தாவே, அதை அருளும். இன்றைக்கு அது எங்கள் மத்தியில் காணப்படுவதாக. நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். கடைசியாக துயரக்காற்று வீசுகின்ற முடிவின் நாளிலே நான் ஆற்றண்டை வருகையில், அந்த வழியை எனக்கு காண்பிக்க யாரோ ஒருவர் காத்துக்கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியிராது. நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியிராது, ஏனென்றால் இயேசு என் எல்லா பாவத்தையும் நிவிர்த்தியா கும்படி மரித்து விட்டாரே; நான் அந்த இருளைக் காண்கையில், அவர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியிராது. 177 நான் இப்பொழுதே அவரை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விலையேறப்பெற்ற கர்த்தாவே, என் கரத்தைப் பிடித்து என்னை வழிநடத்தும், அப்பொழுதே நான் நிலைத்திருப்பேன். கர்த்தாவே, தவறாய் கூறப்படுகின்ற ஒவ்வொரு காரியத்திற்கும், தவறாய் காணப்படுகிற ஒவ்வொரு காரியத்திற்கும் நான் இங்கு எதிர்த்து நிற்பேனாக. கர்த்தாவே எவர் என்ன கூறினாலும் கவலைப்படாமல் நான் எதிர்த்து நிற்பேனாக. நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றபோது, நிற்கும்படி எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே என் கரத்தை பற்றிப்பிடித்து, அதனூடாக இழுத்துக் கொள்ளும். நான் நிற்கும்படி ஏதாவது காரியத்தை செய்யும். அந்த காரியங்கள் தோன்றி, இந்த உலகத்தின் பொக்கிஷங்களும் அதனுடைய எல்லா பகட்டான ஆரவாரமும், அதனுடைய மகிமையும் என்னுடைய கண்களை அதற்கு குருடாக்கும்போது, எனக்காக மரித்த அவரை மட்டுமே நான் பார்ப்பேனாக. அது என்னுடைய எல்லா நண்பர்களையும் கிரயமாக எடுத்துக் கொண்டாலும், அது நான் பெற்றுள்ள எல்லாவற்றையும் கிரயமாக எடுத்துக் கொண்டாலும், அது எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்தவில்லை என்றாலும், நான் அவை எல்லாவற்றையும் பீடத்திலே ஒப்புக் கொடுக்கிறேன். அதுதான் இது, நான் கடமை தவறானவனாக நிற்பேனாக. என்றோ ஒருநாள் சுவாசமானது என் முகத்திற்கு எதிராகும்போது, என் இருதயம் நின்றுபோய் விட்டதையும், என் நாட்கள் முடிவுற்றதையும், என் நேரம் மேலே உள்ளது என்பதையும், என்னுடைய அட்டை அடுக்கடுக்கான மரச்சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டாயிற்று என்பதையும், நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதில்லை என்பதையும் நான் அறிந்து கொள்வேன். அப்பொழுது அவர் அங்கிருப்பார். ஆம், நான் அந்த இருளைக் காணும்பொழுது, அவர் அங்கே எனக்காக காத்துக் கொண்டிருப்பார். எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது. நான் இப்பொழுது அவருக்காக நிற்பேனாகில், அப்பொழுது அவர் எனக்காக நிற்பார். எனக்காக மரித்தவருக்காக நான் ஜீவிப்பேன், அப்பொழுது என்னுடைய ஜீவியம் எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கும். அந்தவிதமாகத்தான் நான் நிற்க விரும்புகிறேன். 178 இங்கே சுகவீனமுள்ள ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நான் யூகிக்கிறேன். அவன் ஏதாவது அட்டைகளை வழங்கினானா? நான் மறந்துவிட்டேன். அவர்கள் அட்டைகளை கொடுத்துள்ளார்களா? ஏதாவது அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா? யாராவது ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்களா? இல்லை. 179 நான் பரிசுத்த ஆவியானவருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே போதும், விசுவாசமுடையவர்களாய் இருங்கள், சந்தேகப்படாதீர்கள். தேவன் உங்களுடைய தொல்லைகளை எனக்கு வெளிப்படுத்துவாரானால்…அது என்னவாயிருக்கிறது என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினால் போதும், உங்களுக்கு என்னைத் தெரியாது, எனக்கு உங்களைத் தெரியாது. ஆகையால் தேவன் இங்கு வெளிப்படுத்துவாரானால், அது முன்பு உண்டான அழிவிற்கு சற்று முன்னதாக செய்தியைக் கொண்டு வந்த அதே தூதன் என்பதையும், இப்பொழுது மற்றொரு அழிவிற்கு முன்னர் இதை கொண்டு வருகிறதும் அதே தூதனாயிருக்கும் என்று நீங்கள் விசுவாசிப்பிர்களா? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்த விரும்பினால் நலமாயிருக்கும், சரி, கர்த்தர் அதை அருளுவாராக. 180 அவர் எனக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். மற்றொருவரும், திருமதி.ஸ்னைடர் இங்கே, இல்லை, இது திருமதி. முர்பை இங்கே எனக்கு அருகில் அமர்ந்துகொண்டிருக்கிறார். இங்கு அமர்ந்து கொண்டிருக்கிறாளே அவளுடைய பெயர் என்ன? நான் அவர்களை அறிவேன். 181 நான் இந்த மனிதனை அறியேன், அவர் எனக்கு ஒரு அந்நியராய் இருக்கிறார். ஆனால் தேவன் அவரை அறிந்திருக்கிறார். இப்பொழுது தேவன் அதை வெளிப்படுத்துவாரானால், உங்களில் எத்தனை பேர் அதை…… 182 என்னை பார்க்காதீர்கள். என்னை பொருத்தவரையில் நான் ஒரு கென்டக்கி மலைவாசியாய் இருக்கிறேன். எனக்கு—எனக்கு போதுமான கல்வியறிவு கிடையாது, என்னுடைய சொந்தப் பெயரையும் கூட எழுதத்தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு காரியம், நான் அவரை அறிந்துள்ளேன் என்பதேயாகும். நான் அறிந்து கொள்ள விரும்புவதெல்லாம் அவ்வளவு—அவ்வளவுதான். இப்பொழுது என்னுடைய இலக்கணத்திற்கு எந்தவித கவனமும் செலுத்தாதீர்கள். 183 இந்த காலையில் என்னுடைய பிரசங்கம் முழுவதுமே, ஒவ்வொரு காரியமும் இலக்கண ஒழுங்குமுறையின்றி இருந்தது என்று நீங்கள் கருதலாம். நீங்கள் அதை வேதத்தோடு ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் இருக்கவில்லையா என்பதை பாருங்கள். நீங்கள்—நீங்கள் அதை அங்கே ஒப்பிடும்போது, உங்களுடைய நோக்கம் சரியில்லையென்றால் பயனில்லை. உங்களுடைய சிந்தனைகளோடு அதை ஒப்பிடாதீர்கள். ஆனால் அவர் என்ன கூறினார் என்பதோடு அதை ஒப்ப்பிடுங்கள். “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர், காரணம் கேட்டுக்குக் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.” கோடான கோடி பேர் அங்கே அதன் வழியாக பிரவேசிப்பார்கள். அநேகமாக பத்து இலட்சத்தில் ஒருவரே இந்த வழியில் வருகிறவர்களாய் இருப்பார்கள். அங்குதான் காரியம். அதைத்தான் அவர் கூறினார். இப்பொழுது, அவர் ஒருபோதும் அந்த எண்ணிக்கையை கூறவேயில்லை, ஆனால் அவர், “நோவாவின் நாட்களிலிருந்தது போல எட்டு ஆத்துமாக்கள், சோதோமின் நாட்களிலிருந்தது போல மூன்று ஆத்துமாக்கள்” என்றார். முழு காரியத்திலிருந்தும் அக்கினிக்கு முன்றே பேர் காப்பாற்றப்பட்டனர். இதுவும் அவ்வண்ணமாகவே இருக்குமே! 184 இப்பொழுது யாராவது உண்மையாகவே ஆவிக்குரியவர்களாக இருப்பீர்களாயின், இந்த மனிதன் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறதை நீங்கள் நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் அப்படியே தன்னால் கூடியமட்டும் விடாமல் என்னை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். அவருடைய கரத்தை உயர்த்தினார். நான் அவரை அறியேன். அவர் அங்கு அமர்ந்து அப்படியே என்னை நோக்கி பார்த்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால், பாருங்கள், அவர் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அது உண்மை. இப்பொழுது கர்த்தர் என்னிடம் கூறுவாரானால்…அந்த மனிதன் என்னிடத்திலிருந்து தூரமாகவே அமர்ந்திருக்கிறார், இது நம்முடைய முதல் சந்திப்பாய் இருக்கிறது. அவர் அங்கு அமர்ந்திருக்கிறார். அவர் யார்—அவர் யார் என்பதை கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால்……நான்—நான் அவரை சுகப்படுத்த முடியாது. நான் சுகமாக்குகிறதில்லை. நான் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் அதை ஏற்கனவே செய்திருக்கிறார். ஆனால் அதுவே உங்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும். இப்பொழுது ஒவ்வொருவரும் காண்கிறீர்கள், அதே ஆவியானவர், அவர் இங்கிருக்கிறார், நினைவிருக்கட்டும், இயேசு முடிவு காலத்திற்கு முன்னதாக இதை வாக்களித்து விட்டார். இதுவே எப்பொழுதும் கடைசி அடையாளமாக இருந்து வருகிறது. 185 அன்றொருநாள் நானும் லியோவும் வீதியில் அமர்ந்து கொண்டு, எங்களில் சிலரைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு மாற்றம் உண்டாகிக் கொண்டிருக்கிறதை, ஒரு மாற்றம் உண்டாகிறதை தொடர்ந்து உணர்ந்தேன். நாங்கள் அதைக் குறித்து பேசினபோது, அது என்னுடைய ஊழியத்தில் ஏற்படு ஒரு மாற்றமாய் இருக்கவில்லை, ஏனெனில் அதில் ஒருபோதும் மாற்றமே இருக்கமுடியாது, ஆனால் அது என்னில் உள்ள ஒரு மாற்றமாய் இருந்தது. நான் எப்பொழுதுமே மெலிந்து கொண்டே போகிறேன், ஜனங்களே எனக்கு துணையாய் வழிநடத்தி எனக்கு வழிகாட்டி, இந்த வழியாகவும், அந்த வழியாகவும் அனுப்புகிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்பு கர்த்தர் என்னிடம் செய்யும்படி கூறின ஏதோ காரியத்தை நான் செய்திருந்தால், நான் இன்றைக்கு உள்ள தொல்லையில் இருக்கவே மாட்டேன். நான் தேவனோடு தனிமையாய் இருக்கும்படி அடுத்த வாரம் வெளியே செல்லப் போகிறேன். ஆம், ஐயா, நான்—நான் பரலோகத்திலிருந்து கேட்க வேண்டும். நான் மெலிந்து போயிருக்க விரும்பவில்லை. நான் என்னுடைய சொந்த திடநம்பிக்கையின் மேல் நிற்க விரும்புகிறேன். 186 அது அந்த மனிதனண்டைக்கு, அவரண்டைக்கு மீண்டும் திரும்பி வருகிறது. அவர் பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஏனென்றால் அந்த மனிதன் விசுவாசித்துக் கொண்டிருக்கிறார். அவர் உண்மையாகவே விசுவாசித்துக் கொண்டிருக்கிறார். நான் எல்லாவிடத்திலும் கூட்டத்தாரை கவனித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அது சரியாக நேராக திரும்பவும் அந்த மனிதனண்டைக்கே வருகிறது. அவர் தேவையுள்ளவராயிருக்கிறார். அவர் பாரமடைந்திருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒருவருக்காக பாரமடைந்திருக்கிறார். அது உண்மை. நீர் யாரோ ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். நீர் யாரோ ஒருவரை உன்னுடைய இருதயத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறீர். அது உண்மை. இல்லையா? அது ஒரு நண்பன். அந்த நண்பனோடுள்ள காரியம் என்னவென்பதை நான் உங்களுக்கு கூறினால், நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரனென்று விசுவாசிப்பீர்களா? அது மட்டுமீறிய குடிக்குட்பட்ட நிலைமையை உடையவர். அது உண்மை. அது உண்மையால், உன்னுடைய கரத்தை உயர்த்து. 187 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்குள்ள யாரோ ஒருவர் தன்னுடைய கரத்தை உயர்த்தினார், யாரோ ஒருவர், இதோ பின்னால் உள்ள ஒரு ஸ்திரீ. ஆம். ஆம். உனக்கு என்னைத் தெரியாது. நான் உங்கள் யாவருக்கும் ஒரு அந்நியனாய் இருக்கிறேனா? எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய இருதயத்தில் என்ன உள்ளது என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களா? சிறிய ஸ்திரீயே, நீ அங்குள்ள அந்த பிள்ளையைப் பற்றி மன கலக்கமடைந்துள்ளாய். அது உண்மை. அந்தப் பிள்ளைக்கு அதனுடைய முகத்தின் மேல் தோல்வியாதி சம்பந்தமான படை உள்ளது. வைத்தியர்களால் அதைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியவில்லை. நீ இங்கு ஒரு அன்னியராய் இருக்கிறாய். நீயும் உன்னுடைய அன்பான பிள்ளையும் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீ யார் என்றும், நீ எங்கிருந்து வருகிறாய் என்றும் தேவனால் என்னிடத்தில் கூறமுடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாயா? அவர் சுகப்படுத்தினால், நீ அந்தப் பிள்ளையின் சுகத்தை ஏற்றுக்கொள்வாயா? [அந்தப் பெண்மணி, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] சரி. நீ புறப்பட்டு வந்த கென்டக்கியிலுள்ள சம்மர்செட்டுக்கே திரும்பிப் போகலாம். அவர் அதை சுகமாக்குவார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கக் கூடுமானால் உங்களுடைய பிள்ளையின் மீதுள்ள தோல் வியாதி சம்மந்தமான படை நீங்கிவிடும். 188 நான் அந்த வார்த்தையை குறிப்பிட்டு கூறினபோது, அங்கே அந்த நீளமான அறையில் கென்டக்கியிலுள்ள சம்மர்செட்டியிலிருந்து ஒரு இருதயக்கோளாறோடு வந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் அங்கே பின்னால் நின்று கொண்டிருந்தார். தேவன் அவர்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால் நலமாயிருக்கும், தேவன் குணப்படுத்தி, ஆரோக்கியமாக்கி விடுவார் என்றே விசுவாசியுங்கள். 189 இங்கே, இதோ யாரோ ஒருவருடைய கரம். இங்கு மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், சரியாக ஒரு பெண்மணி. ஆம், நான் உன்னுடைய கரத்தை கண்டேன். பெண்மணியே, நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேனோ? நான் உன்னை அறியேன். நாம் ஒருபோதும் சந்தித்ததே கிடையாது. நீ என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? [அந்தப் பெண்மணி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] உன்னுடைய இருதயத்தில் ஒரு பாரத்தை அல்லது ஏதோ காரியத்தை வைத்திருக்கிறாய். தேவனால் அதை எனக்கு வெளிப்படுத்தக் கூடுமானால், நீ விசுவாசிப்பாயா? அது கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி என்று நீ விசுவாசிப்பாயா? உன்னுடைய கணவர் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரும் கூட அதே காரியத்தை விசுவாசிக்கிறார். நீரும் அதே காரியத்தை விசுவாசிப்பீரா? அது கிட்டத்தட்ட அங்கே உனக்கு அடுத்து அமர்ந்துள்ள உன்னுடைய சிறிய பெண். அது உண்மை. அவளுக்குள் புற்று நோய் இருக்கிறது. ஆனால் தேவன் அவளை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிப்பாயானால், உன்னுடைய கரத்தை உயர்த்து. சரி, உன்னுடைய கரங்களை அந்த குழந்தையின் மீது வை. 190 கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஆவியின் பிரசன்னத்தில் நான் அந்தக் குழந்தையை கொல்லுகின்ற பிசாசை கடிந்துகொள்கிறேன். நான் விசுவாசத்தினால் அந்த குழந்தைக்கும் கொல்பவனுக்கும் இடையே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை வைக்கிறேன். அது ஜீவிப்பதாக. ஆமென். 191 தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். “நீ விசுவாசிக்கக் கூடுமானால் எல்லா காரியங்களும் கூடும்.” நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால் எல்லாக் காரியங்களும் கூடும். சரியாக. 192 யாரோ ஒருவர் அங்கே பின்னால் தங்களுடைய கரத்தை உயர்த்தினார். எங்கோ, நீங்கள்தான் அங்கே மூலையில் உள்ள ஒரு ஸ்திரீ. நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரனென்று விசுவாசிக்கிறீர்களா? எனக்கு உங்களைத் தெரியாது, உங்களுக்கும் என்னைத் தெரியாது. உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவனால் எனக்கு வெளிப்படுத்தக்கூடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது என்னவாயிருந்தாலும், அது என்னவானாலும், இயேசுவை உங்களுடைய சுகமளிப்பவராக அல்லது சுகம் கொடுப்பவராக ஏற்றுக்கொள்வீர்களா? அது என்னவாயிருந்தாலும்—அது என்னவாயிருந்தாலும்……? அப்படியானால் நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? சரி, அப்படியானால் உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி இருந்து வருகிறது. அதுதான் உங்களுக்கு இருந்து வந்துள்ளது. அது உண்மையானால், உன்னுடைய காலூன்றி எழும்பினால், அது உண்மையானால், அது உண்மையாயிருக்கிறது என்பதை அப்படியே ஜனங்கள் காண்பார்களாக. சரி, இப்பொழுது அது உம்மை விட்டு நீங்கிவிடும். நீங்கள் வீட்டிற்குப் போய் சுகமாய் இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்களும் கூட கென்டக்கிலிருந்து வருகின்றீர்கள். ஹு, ஹு, அது உண்மை. 193 உங்களுக்கு அடுத்து அமர்ந்துள்ள அந்த ஸ்திரீயும்கூட கென்டக்கிலிருந்து வருகிறாள். அவளும் கூட கென்டக்கிலிருந்து வருகிறாள். எனக்கு உன்னைத் தெரியாது. எனக்குத் தெரியுமா? ஆனால் உன்னோடு ஏதோ காரியம் கோளாறாய் உள்ளது என்பதை என்னால் உனக்குக் கூறக்கூடுமானால் நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? அது உன்னுடைய இடுப்பில் உள்ளது. அது உண்மையானால், உன்னுடைய கரத்தை உயர்த்து, ஜனங்கள் காணும்படி இந்தவிதமாய் உயர்த்து, சரி, இப்பொழுது வீட்டிற்கு செல்லுங்கள். அது உங்களை விட்டு நீங்கிப்போம். உங்களுடைய விசுவாசம் உங்களை குணமாக்குகிறது. நீங்கள் விசுவாசிக்கும்படி நான் சவாலிடுகிறேன். நிங்கள் விசுவாசிக்கும்படி உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். 194 இதோ இங்கு ஒரு ஸ்திரீ அமர்ந்து, தன்னுடைய கைக்குட்டையை அவளுடைய முகத்தின்மேல் வைத்துக் கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நான் உங்களை அறியேன். தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் இல்லினாய்ஸிலிலுள்ள ஜாலியட்டிலிருந்து வருகின்றீர்கள். உங்களுக்கு ஒரு கட்டி உள்ளது. அது முற்றிலும் உண்மை. நீங்கள்……வியப்புறலாம். (ஆம், அந்த ஸ்திரீயை ரோஸ்ஸல்லா தான் அழைத்து வந்தாள். அது உண்மை. பொறுமையாயிருங்கள். அவள் அதைக் குறித்து என்னிடம் கூறினாள். ஆனால் நான் அந்த ஸ்திரீயை ஒருபோதும் அறியேன் என்பதை அவள் ஒருபோதும் அறியாதிருக்கிறாள். அது உண்மை. அந்த ஸ்திரீயினுடைய விசுவாசம் மகத்தானதாய் இருக்க வேண்டுமென்றே இது சம்பவிக்கிறது) நான் ஒரு காரியத்தை உங்களுக்கு கூறுவேன். எனக்கு தெரியாது என்பதை நீங்கள்—நீங்கள் அறிவீர்கள். நீ சுகவீனமாய் இருந்துகொண்டு இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டிருக்கிற இந்த குழந்தைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய குழந்தை. அது உண்மை. ஆமென். நான் அதை அறிந்திருக்கவில்லை என்பதை நீ அறிவாய். 195 அதோ அது உள்ளது. அது பரிசுத்த ஆவியாயிற்றே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் அது உண்மையாயிருக்குமானால், “வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது” என்பதைக் குறித்து நான் கூறினது உண்மையாயிருக்கிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இப்பொழுது இங்கு இருக்கிறார். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானது இங்கே இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நான் எவரையுமே சுகப்படுத்துகிறதில்லை. நான் ஒரு சுகமளிப்பவன் அல்ல. ஆனால் தேவனுடைய ஆவியானவர் என்னை அப்படியே தெரிந்து கொண்டு தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. நான் எந்த கல்வியறிவும் இல்லாதவன். நான் எந்தக் காரியத்திலுமே அறிவில்லாதவன். ஆனால் அவருடைய ஆவியே அதைச் செய்கிறது. நீங்கள் பாருங்கள், நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படிக்கே அவர் விரும்புகிறார். 196 இது சத்தியமாய் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால், அதாவது இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் இப்பொழுதே சுகமாக்குகிறார். இப்பொழுது அப்படியே…அது கிங்ஸ்டனிலுள்ள ஊழியக்காரர்களிடத்தில் கிரியை செய்திருந்ததானால், இல்லை அங்கே பின்னாக இருந்தவர்கள் யாரானாலும், அது கிங்ஸ்டனில் கிரியை செய்வதையும், அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் சுகமாக்கப்படுகிறதையும் கண்டனர். இப்பொழுது நாம் இந்த அமெரிக்காவில் அதே காரியத்தை உடையவர்களாயிருக்கையில் அது ஏன் இங்கே கிரியை செய்யாது? நம்மால் ஏன் அதை விசுவாசிக்க முடிகிறதில்லை? ஏனென்றால் நம்மால் தொலைவில் உள்ள அந்த பள்ளத்தை கடக்க முடிகிறதில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 197 இப்பொழுது அதே கரங்களை உங்களுக்கு அடுத்தபடியாக உள்ள யாராகிலும் ஒருவர் மீது வையுங்கள். நான் இங்கிருந்தே அவருக்காக ஜெபிக்கட்டும். உங்களுடைய இருதயத்தில் எந்த சந்தேகமும் இருக்கவே கூடாது. இதுவே அதற்கு முடிவாகும். 198 ஓ, என்னே, சகோதரன் நெவில்! நான் எவ்வளவு ஆர்வமுள்ளவனாயிருக்கிறேன். நான் எப்படியாய் ஜெபித்திருக்கிறேன், நான் எவ்வளவு…நான் என்னையே அறியாமல் உணர்விழந்தவனாயிருக்கிறேன் என்று நீங்கள் கருதலாம்; நான் உணர்விழக்கவில்லை. நான் எங்கிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் இந்த சிறு காரியத்தை உங்களுக்கு புரியும்படி செய்தால் நலமாயிருக்குமே! தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கே இந்த காலையில் ஜனங்களுக்கு மத்தியில், இப்பொழுதே, இப்பொழுதே பிரசன்னமாகி தம்மை காண்பிக்கிறார் என்பதை நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா? நல்லது, நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம் நீர் அதை கூறினீர்” என்கிறீர்கள். 199 நான் அதை எப்படி கூறினேன்? நான் உங்களை அறியேன். மற்றொரு ஸ்திரீ எலும்புருக்கி நோயோடு இருக்கிறாள். சகோதரியே, நீ சுகமடைந்துவிட்டாய். உனக்கு ஆசீர்வாதம். நான் உன்னுடைய மன்னிப்பிற்கு மன்றாடுகிறேன், நீ எலும்புருக்கி நோய் உள்ள ஒரு ஸ்திரீக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாய். அவள் ஒரு நரைத்த தலையுடைய ஸ்திரீயாய் இருக்கிறாள். ஆம், சரி, இதை விசுவாசி. சரி, அவர் இங்கிருக்கிறார். இது அவருடைய சமூகமாய் இருக்கிறது. 200 இப்பொழுது இதன் காரணமாகவே அவர், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்களுடைய கரங்களை வைப்பார்களேயானால், அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். அவர் எப்படி பொய்யுரைக்க முடியும்? பாருங்கள், அது அவர் பேரில் அல்ல, அது என் பேரிலும் அல்ல, இப்பொழுது அது உங்கள் பேரில்தான் உள்ளது. இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். 201 இப்பொழுது ஒரு சிறு ஸ்திரீ அங்கே சற்று பின்னால் அமர்ந்துள்ளதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் அதிக விசுவாசமுள்ளவளாய் இருக்கிறாள். அவளும் அவளுடைய கணவனும் சற்றுமுன் புதிதாக கர்த்தரண்டைக்கு வந்தவர்கள். அவள் இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு குடற்சரிவு இருந்தபடியால், வைத்தியர் சில நாட்களுக்கு முன் அவளுக்கு அறுவைச்கிகிச்சை செய்யப் போவதாக இருந்தார். ஆனால் அப்பொழுது அவளுக்கு பிள்ளை பிறக்கப் போவதாக இருந்தது. எனவே குழந்தை பிறந்த பிறகு வைத்தியர் அறுவை சிகிச்சை செய்யப்போவதாக இருந்தார். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் அவர்களால் குடற்சரிவையே கண்டறிய முடியவில்லை. அது முழுமையாக மறைந்து போய்விட்டது. பார்த்தீர்களா? ஏன்? அவள் அந்தவிதமாய் அப்படியே…அவள் இங்கே மேடையில் ஒருபோதும் இந்தவிதமாய் இருந்ததேயில்லை. அவள் வெறுமனே பின்னால் அங்கு அமர்ந்து அதை விசுவாசித்தாள் என்று நான் நம்புகிறேன். அது உண்மை. அவளுடைய கரத்தை பார்த்தீர்களா? வைத்தியர்களால் அந்த குடற்சரிவை கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை. அது முழுமையாகவே மறைந்துபோய் விட்டது. ஏன்? அவள் இதை விசுவாசித்து, அப்படியே முன்வந்து, “அது உண்மையாயிற்றே!” என்றாள். 202 இப்பொழுது நீங்களும் அதே விதமாக செய்யுங்கள். உங்களுக்கு இருக்கின்ற எல்லா வேதனைகளும் நீங்கிப் போகத்தான் வேண்டும். அந்த மனிதனுடைய பாதத்தில் இருந்த சர்ப்பமாகிய பிசாசுக்கடியானது அவனை கொல்லும்படி விஷமுண்டாக்கினபோது தேவனால் ஏதோ காரியத்தை ஒரு மனித சரீரத்திற்குள்ளாக அனுப்பி, அதை தடுத்து, அதை அங்கேயே கொல்ல முடிந்ததென்றால், அவர் உங்களுடைய சரீரத்தில் உள்ள சுகவீனத்தை கொல்வது எவ்வளவு நிச்சயம்? ஏனென்றால் அந்த மனிதன் இக்கட்டிலிருந்தபோது அவனுக்கு உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. உங்களுக்கும் கூட செய்ய வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் அதை பெற்றுக்கொள்ளாமலிருந்தால் நீங்கள் மரித்து விடுவீர்கள். 203 இப்பொழுது உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நீங்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்களுக்கு அடுத்துள்ள நபருக்காக ஜெபியுங்கள். அதுவே கிறிஸ்துவனின் மாதிரியாய் உள்ளது. 204 இதை கற்றுக்கொள்ளுங்கள், இதை கற்றுக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் மற்றவர்களுக்கு ஒன்றைச் செய்யும்போது நீங்கள் அதை கிறிஸ்தவுக்கு செய்கிறீர்கள். நீங்கள் யாரோ ஒருவருக்கு நன்மையாயிருக்கும்பொழுது, நீங்கள் கிறிஸ்துவுக்கே நன்மையாய் இருந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாரையாவது தவறாக நடத்தும்போது, நீங்கள் கிறிஸ்துவையே தவறாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஓ, என்னே! 205 ஓ, நான் மட்டும் இதை திருத்தியமைக்க கூடுமானால், நான் அப்படியே ஜனங்களுக்கு அதை புரிந்து கொள்ளும்படி செய்யக்கூடுமானால் நலமாயிருக்கும். நான் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேனோ, நான் எதை உணர்ந்து கொண்டிருக்கிறேனோ, நான் அறிந்துள்ளது எதுவோ, அதுவே சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். பாருங்கள். இந்த காலை செய்திக்குப் பிறகு எப்படியாய் கிறிஸ்து ஜனங்களுடைய இருதயத்திற்குள்ளாக வந்து, அங்கு ஏதோ காரியத்தை சிருஷ்டிக்க கிரியை செய்து கொண்டிருக்கிறார். உணர்ச்சி வசப்படுதலை அல்ல, மனக்கிளர்ச்சியை அல்ல (அது அதனோடு வருகிற) ஆனால் சத்துருவுக்கு சிறிதளவும் இடங்கொடுக்கக்கூடாது என்று கூறும் மரித்துப்போகாத விசுவாசத்தையே சிருஷ்டிக்க கிரியை செய்து கொண்டிருக்கிறார். 206 இப்பொழுது, அவர் என்னுடைய ஜெபத்தை கேட்பார். அவர் உங்களுடைய ஜெபத்தையும் கேட்பார். நான் உங்கள் யாவருக்காகவும் ஜெபிக்கையில், இப்பொழுது நீங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். 207 ஓ, கர்த்தாவே, இந்த கடும் சோதனையான நேரத்தில், இது அநேகருக்கு மரணத்திற்கும், ஜீவனுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டப்போகிறது என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். நான் உம்முடைய சமூகத்தில் நடுங்குகிறேன், ஏனென்றால் தேவனாகிய கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடு ஜெபிக்க வேண்டும் என்பதை நான் அறிந்துள்ளேன். நான் அதை தெளிவாக உணர்ந்திருந்தாலும் அடுத்த ஐந்து நிமிடங்களில் எங்கள் மத்தியில் சுகவீனமான நபராய் ஒருவரும் இல்லாதிருக்கும்படி, இங்குள்ள ஒவ்வொரு நபரும் நீர் இங்கு இருக்கிறீர் என்பதை உணர்ந்து கொள்வார்களாக. கர்த்தாவே, இந்த காலையில் இங்கு அவர்கள் நிற்கிறார்கள். நான் அவர்களை அறிந்திருக்கவில்லை என்பதை அறிந்தே அவர்கள் தங்களுடைய கரங்களை உணர்த்தினர். ஆனால் உம்முடைய ஆவியானது அவர்களை அறிந்திருக்கிறது. நீர் அவர்களுடைய இருதயத்தின் இரகசியத்தையே அறிந்திருக்கையில், அவர்களுடைய வேதனைகளையும், அவர்களுடைய வருத்தங்களையும் நீர் அறிந்திருப்பது எவ்வளவு நிச்சயமாய் இருக்கிறது. ஆகையால் கர்த்தாவே, இப்பொழுதே உம்முடைய ஆவியானது அவர்களுடைய சுகவீனமான சரீரங்களைத் தொடுவதாக. அது இன்றைக்கே செய்யப் படுவதாக. இதை அருளும் கர்த்தாவே. அவர்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். 208 அன்புள்ள தேவனே, பரிசுத்த ஆவியானவர் அதை அவர்களுக்கு அவ்வளவாய் தத்ரூபமாக்கி, அவர்கள் அதை மீண்டும் ஒருபோதும் அவிசுவாசிக்காதபடிக்கு செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே மற்றொரு சுகவீனம் இருக்கிறது. அது இந்த சரீரப்பிரகாரமான சுகவீனத்தைக் காட்டிலும் மிகவும் பெரிதானதாய் இருக்கிறது. அது ஒரு ஆவிக்குரிய சுகவீனமாய் இருக்கிறது. ஒவ்வொரு இருதயமும் திறக்கப்படுவதாக. 209 கர்த்தாவே, நீர் ஆபிரகாமின் பக்கத்தில் அங்கே நின்று, இதே காரியத்தை செய்து காண்பித்தபோது, அது எப்படி இருந்திருக்கும். உமக்கு “பின்னாக” இருந்த சாராளிடம் கூறினீர். வேதம், “அவள் கூடாரத்திலே நகைத்தாள்” என்கிறது. நீர் அதை அவளிடத்தில் கூறினீர். ஆபிரகாம் அது ஏலோஹீம், மகத்தான தேவன் என்பதை அடையாளங்கண்டு கொண்டான். ஒரு சில நிமிடங்களிலே நீர் அவனுடைய பார்வையிலிருந்து மறைக்கப்பட்டீர். 210 கர்த்தாவே, இயேசுவானவர் இன்று அதே காரியத்தை செய்து, “நீங்கள் ஆபிரகாம் உங்களுடைய ‘தகப்பன்’ என்று சொல்லிக்கொண்டு, அதே சமயத்தில் நீங்கள் வேத வாக்கியங்களை அறிந்துள்ளதாகக் கூறிக்கொள்கிறீர்கள்” என்றார். மேலும், “நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்கிறீர்கள்” என்றார். அவர்கள் அவரை “பெயல்செபூல்” என்றழைத்தனர். 211 ஆனால் இந்த கடைசி நாட்களில் நீர் மீண்டுமாய் உம்முடைய ஆவியை ஊற்றுவீர் என்று நீர் வாக்குப்பண்ணினீர். தீர்க்கதரிசி, “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்றான். இதோ நாங்கள் இருக்கிறோம். 212 இந்த முறைகேடான உலகமானது ஒரு குடிகார மனிதன் இரவிலே தள்ளாடுவது போல பாவத்தின் கீழ் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கையில், சீக்கிரத்தில் அது வெடித்து சிதறிவிடும், அப்பொழுது அதனுடைய ஒரு எரிமலை தூசியும் விடப்பட்டிருக்காது. நேரமானது கடந்து கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். 213 ஓ, தேவனே, எங்களிடத்திலிருந்து எல்லா சந்தேகத்தையும் எடுத்துப்போடும். இப்பொழுது உள்ள இந்த காலமற்ற சூழ்நிலையில் எங்களிடத்தில் அசைவாடும். பரிசுத்த ஆவியானவரே வாரும். உம்முடைய பெரிய செட்டைகளை விரித்து, இப்பொழுது இந்த சிறு ஜனக்கூட்டத்தின் மீது அசைவாடும். அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக உம்மை ஆழப்பதியச் செய்யும். நீர் தெய்வீக பிரசன்னத்தில் இருக்கிறீர் என்பதையும், “உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே” என்று உரைத்துள்ளது நீரே என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்களாக. உம்முடைய சமூகமானது இந்த காலையில் அவர்களிடத்தில் உள்ள முழு விசுவாசத்தோடு இங்கிருப்பது செல்லும்படி அவர்களுடைய இருதயத்திற்குள்ளாக ஏதோ ஒன்றைச் செய்வதாக. சுகவீனமான ஒவ்வொருவரும் அவதியுறுகின்ற ஒவ்வொரு நபரும் சுகமடைவார்களாக. 214 உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் நான் நின்று ஒவ்வொரு பிசாசையும் கடிந்து கொள்கிறேன். நான் ஒவ்வொரு வியாதியையும் கடிந்து கொள்கிறேன். நான் சாத்தானை கடிந்து கொள்கிறேன். 215 நீ தோற்று ஓடிப்போய்விட்டாய். நீ முற்றிலும் பொய்யுரைத்து ஏமாற்றுபவனேயல்லாமல் ஒன்றுமில்லை. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த காலையில் உன்னுடைய கரத்தை அதினின்று அப்புறப்படுத்தும்படி கூறுகிறோம். அவருடைய ஊழியக்காரனாய் இருக்கின்றபடியால் அவருடைய வார்த்தையை பிரசங்கித்து, ஜனங்களுக்கு சத்தியத்தைக் கூறி, சரியாக புரிந்து கொண்டு தேவனுடைய வார்த்தையோடு சரிபடுத்திக் கொள்ளும்படி கூறியிருக்கிறபடியல் சாத்தானே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை கடிந்து கொள்கிறேன். தூரத்திலும், அருகிலுமிருந்து வந்திருக்கிற ஒவ்வொருவரும் சுகமடையும்படி அவர்களை விட்டு அகன்று போ. இந்தக் கூட்டத்தாரிடத்திலிருந்தும், இந்த ஜனங்களிடத்திலிருந்தும் போ. ஜீவிக்கின்ற தேவனைக் கொண்டு நான் உனக்கு கட்டளையிடுகிறேன். வேதம், “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என்றுரைத்துள்ளது. அநேக நீதிமான்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர்கள் மேல் இங்கே இந்த காலையில் வைத்துள்ளனர். ஓ, சாத்தானே, அது நான் என்றே எண்ணும்படி நீ விரும்புகிறாய். ஆகையினால் நீ அவர்களிடத்திலிருந்து மகிமையை எடுத்துக் கொள்ளப் பார்க்கிறாய். ஆனால் அது தேவனில் உள்ள அவர்களுடைய விசுவாசமாயுங்கூட இருக்கிறது. அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்களே! அவர்களுடைய விசுவாசத்தினால் நீ வெளியேறித்தான் ஆக வேண்டும். எனவே உன்னுடைய பயணத்தை இங்கிருந்தே மேற்கொண்டு, உனக்கு சொந்தமான இடமாகிய புறம்பான இருளுக்குள்ளாக செல்வாயாக. தேவனுடைய வேதாகமத்தின் அதிகாரத்தைக் கொண்டும், தூதனால் கொடுக்கப்பட்ட என்னுடைய கட்டளையைக் கொண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை கடிந்து கொள்கிறேன். இப்பொழுதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் போ, அவர்கள் விடுதலையடைவார்களாக. ஆமென். 216 நீங்கள் சுகமாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் இப்பொழுது இயேசு கிறிஸ்துவை என்னுடைய சுகமளிக்கிறவராக ஏற்றுக் கொள்கிறேன். எல்லா மாயைகளும் என்னிடத்திலிருந்து மறைந்து போய்விட்டன. நான் அவருடைய வல்லமையின் பரிபூரணத்தில், அவருடைய பிரசன்னத்தில், அவருடைய பிரசன்னத்தின் பாக்கியத்தில் இப்பொழுது அவரை ஏற்றுக் கொள்கிறேன். நான் அவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். என் விசுவாசம் உம்மையே நோக்கி பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே; இப்பொழுது நான் ஜெபிக்கையில் எனக்கு செவிகொடும், என் பாவத்தை எல்லாம் போக்கிவிடும், உம்மை விட்டு விலகிப் போகாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். இப்பொழுது நாம் உண்மையாகவே இனிமையாக அவரண்டையில் நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக. நான் வாழ்க்கையின் இருளான பாதையில் நடந்து செல்கையில், துயரங்கள் என்னை சூழ்ந்துகொள்கையில், ஓ தேவனே நீரே என் வழிகாட்டியாயிரும் (ஓ தேவனே); இருள் பகலாக மாற கட்டளையிட்டு, துயரத்தை துடைத்து, பயத்தைப் போக்கி, உம்மைவிட்டு விலகிப் போகாதபடி என்னை காத்துக் கொள்ளும் [சகோதரன் பிரான்ஹாம், என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது என்று வாய் திறவாமல் மௌனமாக பாடத்துவங்குகிறார்.—ஆசி.]… ஐசுவரியமான கிருபையாயிற்றே!